புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஜூலை, 2015

யோஷித்த ராஜபக்ச,முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் அதிகாரி அநுர சேனாநாயக்க கைது செய்யப்படுவார்கள்


இலங்கையின் முன்னாள் ரக்பி வீரரும் ஹெவலொக்ஸ் அணியின் தலைவருமான வாசிம் தாஜூதீனின் மரணம் தொடர்பில் யோஷித்த ராஜபக்ச மற்றும் முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்
அதிகாரி அநுர சேனாநாயக்க கைது செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இம்மரணம் தொடர்பில் ரகசிய பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் நிறைவடைந்துள்ள நிலையில், வாசிம் தாஜூதீனின் மரணம் வாகன விபத்தில் இடம்பெற்றதல்ல எனவும் அது கொலை எனவும் நேற்று இரகசிய பொலிஸாரினால் நீதிமன்றில் அறிவிக்கப்பட்டிருந்தது.
வெள்ளவத்தை, முருகன் வீதியில் வசித்த வந்த வாசிம் தாஜூதீன் 2012ஆம் ஆண்டு மே மாதம 16ஆம் திகதி நாரஹென்பிட்டிய ஷாலிக்கா மைதானத்திற்கு அருகில் அவர் பயணித்த வாகனம் தீப்பற்றியதினால் உயிரிழந்துள்ளார் என செய்தி வெளியாகின.
2012ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதி காலை அவரின் காரில் இருந்து சடலம் மீட்கப்பட்ட போது சேதமடைந்து காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தாஜூதீனின் காதலியுடன் யோஷித்த ராஜபக்சவுக்கு தொடர்பிருப்பதனை அறிந்தமையினால், யோஷித்தவுக்கம் தாஜூதீனிக்கும் இடையில் வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதன் போது தாஜூதீன், யோஷித்தவை திட்டியதன் பின்னர் இம்மரணம் இடம்பெற்றுள்ளதாகவும் சந்தேகிக்கப்படுகின்றது.
கொலை செய்து, அது விபத்து என்று தெரியப்படுத்துவதற்காக உடலை அவரது வாகனத்திலே வைத்து, வாகனத்திற்கு தீ வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இப்போலியான வாகன விபத்து தொடர்பில் நாரஹென்பிட்டிய பொலிஸ் அறிக்கையை மாற்றுவதற்காகவும், அறிக்கை தொடர்பில் அனைத்து அறிவுரையும் வழங்கியிருப்பது குறித்த சமயத்தில் கொழும்பு சிரேஷ்ட பிரதி பொலிஸ் அதிகாரி அநுர சேனாநாயக்கவினால் என தெரியவந்துள்ளது.

ad

ad