புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 ஜூலை, 2015

ஜனாதிபதி ஆற்றிய உரையின் உள்நோக்கம் என்ன?


மகிந்த ராஜபக்சவிற்கு வேட்புரிமை வழங்கிய நாள் முதல், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது சுமத்தாத குற்றச்சாட்டுக்கள் இல்லை என்று கூறலாம்.
ஆனால் இன்றைய தினம் நாட்டு மக்களுக்கு அவர் ஆற்றிய உரையின் மூலம் எல்லாவிதமான குற்றச்சாட்டுக்களுக்கும் அவர் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் என்றே கூறலாம்.

முன்னதாக ஜனாதிபதிகள் யாராக இருந்தாலும் உரையாற்றும் பொழுது தயார்ப்படுத்தி அதனை எடுத்து வந்து வாசித்துக்கொள்வார்கள். ஆனால் இன்றைய தினம் ஜனாதிபதி எந்தவிதமான தயார்ப்படுத்தல்களும் இல்லாமல் பேசியிருக்கின்றார்.

அவரின் பேச்சில் ஒரு தெளிவும், நிதானமும், அரசியல் நோக்கமும் இருந்ததை அவதானிக்க முடிந்தது.

நான் எந்தவொரு கட்சிக்கும் ஆதரவளிக்கவில்லை என்றும், நடுநிலை வகிக்கப்போவதாகவும் மிகத் தெளிவாக தெரிவித்துள்ளார்.

அதாவது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக இருந்து கொண்டு, அக்கட்சியின் வளர்ச்சியை பற்றி பேசாமல் தான் யாருக்குமே ஆதரவுவளிக்கப் போவதில்லை என்று கூறியமையானது, ரணிலின் கட்சியை ஆதரிப்பதற்கு வழங்கிய வாக்குறுதியாக இதனை பார்க்க வேண்டியுள்ளது.

மேலும், இந்த தேர்தலில் மஹிந்த தோல்வியையே தழுவுவார் என்றும், அவருக்கு தன்னுடைய ஆதரவு ஒருபோதும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தான் மகிந்தவிற்கு அனுமதி வழங்க நிர்ப்பந்திக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஜனாதிபதிக்கும் தனக்கும் நல்லதொரு உறவு இருப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும், பிரதமருமாகிய ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கும், தனக்கும் மிகப்பெரியதொரு இணக்கப்பாடு இருக்கிறது என்றும் ஆகவே இத்தேர்தல் பற்றி யாரும் கவலைப்படாமல் வெற்றிக்காக உழைக்குமாறு ரணில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை 2020 ஆண்டு தேர்தல் பற்றியே அதிகம் கவலை கொள்ள வேண்டும் என்றும், ஏனெனில் இம்முறை நடக்கவிருக்கும் தேர்தலில் மகிந்த தலைமையிலான பலமானதொரு எதிர்க்கட்சி உருவாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதுவாயினும், அமெரிக்கா விரும்பும் ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான அரசாங்கத்தை மைத்திரி விரும்புகின்றார் என்பது இன்றைக்கு முடிவாகிவிட்டது.

அதேவேளை மைத்திரி மீது இருந்த குற்றச்சாட்டுக்களும், நிர்மூலமாக்கப்பட்டுள்ளது.

இனி இவற்றுக்கு மஹிந்த ராஜபக்‌ஷ என்ன பதில் கொடுக்க போகின்றார் என்பதில் இருந்து தான் தேர்தல் களம் சூடுபிடிக்கும்.

ad

ad