முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் மரண தண்டனை, கருணை மனு மீதான தாமதத்தை காரணம் காட்டி கடந்த ஆண்டு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
இதையடுத்து, தண்டனை அனுபவித்த காலத்தை கருத்தில் கொண்டு அவர்களை விடுவிக்க தமிழக அரசு முடிவெடுத்தது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்குத் தொடர்ந்திருந்தது.
இதையடுத்து, ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளை விடுதலை செய்வது தொடர்பான வழக்கை விசாரிப்பதற்காக தலைமை நீதிபதி தத்து தலைமையில், நீதிபதிகள் இப்ராஹிம் கலிபுல்லா, பி.சி.கோஷ், யு.யு.லலித், ஏ.எம்.சப்ரே ஆகியோர் அடங்கிய அமர்வு நியமிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த மனு தலைமை நீதிபதி தத்து தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் மத்திய அரசு ரிட் மனு தாக்கல் செய்ய முடியுமா? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மனுத் தாக்கல் செய்ய முகாந்திரம் உள்ளதா என்பது பற்றி மத்திய அரசு முதலில் வாதம் செய்ய வேண்டும் என்று கூறினர்.
இதையடுத்து, 7 பேரின் விடுதலைக்கு எதிராக மத்திய அரசு ரிட் மனுத் தாக்கல் செய்தது. இதைத் தொடர்ந்து வாதிட்ட மத்திய அரசு வழக்கறிஞர், "குற்றவாளிகளை விடுவிப்பதில் உரிய விதிகளை பின்பற்றாமல் தமிழக அரசு தன்னிச்சையாக முடிவு எடுத்துள்ளது. முடிவு எடுக்கும் விவகாரத்தில் மாநில அரசை விட மத்திய அரசுக்குதான் அதிகபட்ச அதிகாரம் உள்ளது. மேலும் சம்பவம் நடந்த நாள் முதல் சிபிஐ விசாரித்து வருவதால் மாநில அரசுக்கு எந்த பங்கும் இல்லை. முன்னாள் பிரதமரை கொலை செய்தவர்களுக்கு மேலும் கருணை காட்டத் தேவையில்லை" என்றார்.
அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி தத்து, ஆயுள் தண்டனை என்பது ஒருவருடைய ஆயுள் முழுவதும் வரை என்பதை ஏற்க முடியாது என்றார்.
இதைத்தொடர்ந்து வழக்கின் விசாரணையை நாளை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.