புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஜூலை, 2015

சடலமாக மீட்கப்பட்ட சிறுமி யார் என அடையாளம் காணப்படவில்லை ; கிளி. பொலிஸார் தெரிவிப்பு

குஞ்சுப்பரந்தன் பகுதியில் நேற்றுமுன்தினம் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்ட சிறுமி யார் என அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

 
நேற்று முன்தினம் கிளிநொச்சி பொறிக்கடை அம்மன் ஆலயத்திற்கு முன்பாக உள்ள குஞ்சுப்பரந்தன் வயலுக்கு நடுவில் உருக்குலைந்த நிலையில் சிறுமி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது. 
 
குறித்த சடலம்  கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் உருத்திரம் எள்ளுக்காட்டுப்பகுதியில் காணாமல் போன 3 வயது சிறுமியினுடையதாக இருக்கும்  என சந்தேகத்திற்கு இடமாக விசாரணைகள் இடம்பெற்றன.
 
சடலம் மருத்துவ பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சட்ட ரீதியான தகவல் எதுவும் கிடைக்காத நிலையில் குறித்த சடலம்  யாருடையது என அடையாளம் காணப்படவில்லை என்றும்  பொலிஸார் தெரிவித்தனர்.
 
அத்துடன்  எள்ளுக்காட்டில் காணாமல் போன சிறுமி அணிந்திருந்த பாவாடை உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்ட சிறுமியின் சடலத்தில் காணப்படவில்லை என்றும்  மேலே ரீசேட் மட்டுமே காணப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்

ad

ad