புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஜூலை, 2015

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே... பாடலும், உள்ளத்தில் நல்ல உள்ளம் பாடலும்

T























சென்னையில் அவர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 88.தமிழ் திரை உலகின் பொற்காலம் என்று சொல்லப்படும் எம்.ஜி.ஆர்–சிவாஜி காலத்தில், புகழ் பெற்ற இசையமைப்பாளராக உச்சத்தில் இருந்தவர், எம்.எஸ்.விஸ்வநாதன்.

தனது மெல்லிசை மூலம் தமிழ் திரை உலகையும், ரசிகர்களையும் கட்டிப்போட்டவர். இவரும், டி.கே.ராமமூர்த்தியும்
இரட்டையர்களாக இணைந்து இசையமைத்த பாடல்கள், தலைமுறைகளை கடந்து இன்றும் முணுமுணுக்கப்படுகின்றன.

இருவரும் இணைந்து 700 படங்களுக்கும், எம்.எஸ்.விஸ்வநாதன் தனியாக 500 படங்களுக்கும் மேல் இசையமைத்து இருந்தார்கள். இரண்டு பேரும் இணைந்து இசையமைத்த முதல் படம், ‘பணம்.’ எம்.எஸ்.விஸ்வநாதன் கடைசியாக இசையமைத்த படம், ‘சுவடுகள்.’

எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு இருதய அறுவை சிகிச்சை நடந்தது. சில மாதங்கள் வீட்டிலேயே ஓய்வு எடுத்து வந்த அவர், அதன்பிறகுதான் ‘சுவடுகள்’ படத்துக்கு இசையமைத்தார். வெளிநிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார்.

கடந்த மாதம் 20–ந் தேதி அவருக்கு திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக சென்னை அடையாறில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை அவசர சிகிச்சை பிரிவில் வைத்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தார்கள். கடந்த 24 நாட்களாக அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

நேற்று அதிகாலை 4 மணிக்கு அவருக்கு மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அவர் உயிரை காப்பாற்ற டாக்டர்கள் போராடினார்கள். என்றாலும் சிகிச்சை பலன் அளிக்காமல், எம்.எஸ்.விஸ்வநாதன் அதிகாலை 4.15 மணிக்கு மரணம் அடைந்தார்.

அவருடைய உடல் ஆஸ்பத்திரியில் இருந்து சென்னை சாந்தோமில் உள்ள அவரது வீட்டுக்கு எடுத்து வரப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.திரைஉலக பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், அஞ்சலி செலுத்தினர்.

அ.தி.மு.க. சார்பில் அமைச்சர்கள் நத்தம் ஆர்.விஸ்வநாதன், எடப்பாடி கே.பழனிச்சாமி, கே.டி.ராஜேந்திரபாலாஜி, டாக்டர் ஜெயவர்தன் எம்.பி. பா.வளர்மதி ஆகியோர் விஸ்வநாதன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

எம்.எஸ்.விஸ்வநாதனின் இறுதிச்சடங்குகள் இன்று (புதன்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கியது . 9--40  மணிக்கு இறுதி ஊர்வலம் புறபட்டது. ஊர்வலத்தில் முக்கிய பிரமுகர்கள் நடிகர் கமல்ஹாசன் திரை உலகினர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்

 எம்.எஸ்.விஸ்வ நாதன் உடல் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வேனில் ஏற்றப்பட்டு பெசன்ட்நகர் மயானம் நோக்கி புறப்பட்டது. வேன் முன்னால் இசைக் கலைஞர்கள் வயலின் இசையை இசைத்தபடி சென்றனர். வேன் முன்னால் எம்.எஸ்.விஸ்வநாதன் போட்டோ வைக்கப்பட்டு அதில் இசையால் வணங்குகிறோம் என எழுதப்பட்டு இருந்தது. வேனுக்கு முன்னால் சென்ற ஜீப்பில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன், தேவன் கோவில் மணி ஒசை, மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா உள்ளிட்ட பாடல்கள் ஒலிபரப்பப்பட்டன.

எம்.எஸ்.விஸ்வநாதனின் இறுதி ஊர்வல பாதையில் வழி நெடுகிலும் சுமார் 7 கி.மீட்டர் தூரத்துக்கு அவரது ரசிகர்களும், பொது மக்களும், திரண்டு நின்று இறுதி மரியாதை செலுத்தி னர். வீட்டில் இருந்து புறப்பட்டும் போது முதல் பாடலாக புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே... பாடலும், மயானத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன் உடலை இறக்கிய பொது உள்ளத்தில் நல்ல உள்ளம் பாடலும் பாடப்பட்டது.

ஊர்வலம் மயானத்தை அடைந்ததும் எம்.எஸ்.விஸ்வநாதன் உடல் வேனில் இருந்து இறக்கப்பட்டு தகனம் செய்யப்பட்டது.

எம்.எஸ்.விஸ்வநாதனின் இசையும் பாடல்களும் சாகாவரம் பெற்றவை. என்றென்றும் அவை தமிழ் நெஞ்சங்களின் மனதில் அவை நிலைத்து நிற்கும்.
கரு

ad

ad