புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஜூலை, 2015

2015ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் களத்தில் ஊடக பிரபலங்கள்.

காலம் இப்படியுமா?

2015ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் களத்தில் ஊடக பிரபலங்கள்...
தமிழ்த் தேசியத்திற்காய் தன் எழுது கோலை அர்ப்பணித்தவர் எனப் போற்றப்பட்ட பிரபல ஊடகவியலாளர் வீரகேசரி தேவராஜ் இலங்கைத் தொழிலாளர் காங்கரிஸ்
பட்டியலில் மகிந்த ராஜபக்ஸவின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் பதுளை மாவட்ட தேர்தல் களத்தில் குதித்தார்...
பிரபல ஊடகவியலாளர் மின்னலில் மின்னுவார் என பேசப்படும் சிறீரங்கா, மகிந்த ராhஜபக்ஸவின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் இலங்கைத் தொழிலாளர் காங்கரசிற்கான தேசியப் பட்டியலில் இணைக்கப்பட்டார்.
எழுத்தாளர், பதிவாளர், தமிழ்த் தேசிய உணர்வாளர் எனப் போற்றப்பட்ட நல்லையா குமரகுருபரன் மகிந்த ராஜபக்ஸவின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கொழும்பு மாவட்ட தேர்தல் களத்தில் போட்டி...
தமிழ்த் தேசியத்திற்காய் தன்னை, தனது ஊடகத் துறையை அர்பனித்தவர் என அவரது ஆதரவாளார்களால் புகழப்பட்ட ந. வித்தியாரதரன் ஜனநாயகப் போராளிகள் அமைப்பில் யாழ் மாவட்ட தலைமை வேட்பாளர்....
ஊடக நிறுவனத்தின் பலத்தின் அடிப்படையில் கடந்த பொதுத்தேர்தலில், தமிழ் கூட்டமைப்பின் சார்பில் களமிறக்கப்பட்ட ஈஸ்வரபாதம் சரவணபவன் இம்முறையும் யாழ் தேர்தல் களத்தில்
தமிழ் மக்களின் இனப்பிரச்சனைத் தீர்வில் புதிய சிந்தனை மாற்றம் வேண்டும் என இலங்கையிலும், புலம்பெயர் இணையத்திலும் தொடர் கட்டுரைகளை எழுதி வந்த, கூட்டமைப்பின் மீது காரசாரமான விமர்சனங்களை முன்வைத்த யதீந்திரா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருமலை மாவட்ட தேர்தல் களத்தில் போட்டி..

ad

ad