புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஆக., 2015

Balachandran Gajatheepan என்பவர் தனபாலசிங்கம் சுதர்சன் மற்றும் 7 பேர்ஆகியோருடன்
பொய்ச்செய்திகளுக்கு ஏமாறாமல் கூட்டமைப்பின் வெற்றிக்காக பாடுபடுவோம்.
எப்படியாகிலும் தேர்தலில் வாக்குகளைப் பெற்றுவிடவேண்டும்
என்பதற்காக எப்படியெல்லாம், கீழ்த்தரமான செய்திகளைப்பரப்பி த.தே.கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கிடையே முரண்பாடுகளை வளர்க்க வேண்டும் என்றும், அதன்மூலம்தாம் நன்மையடையலாம் என நினைப்பவர்களின் திட்டமிட்ட விசமத்தனமான செயற்பாடு ஒன்றின் வெளிப்பாடே எனது பெயரைத்தவறாகப்பயன்படுத்தி, நேற்றைய தினம் பெயர் அறியா இணையத்தளம் ஒன்றில் வந்திருக்கக்கூடிய பொய்ச்செய்தியாகும்.த.தே.கூ வினைப்பலவீனப்படுத்தி, அதன்மூலம் தமிழ்மக்களது அரசியலுரிமைப்போராட்டத்தின் வீச்சைக்குறைத்து விடவேண்டும் என கங்கணம் கட்டிச்செயற்படுபவர்கள் தான் இவ்வாறான திட்டமிட்ட அடிப்படையிலான , உண்மைக்குப்புறம்பான செய்திகளைப் “பதிவு” செய்து வருகின்றார்கள். எங்களைப்பொறுத்த வரையில் எங்களது கட்சியின் தலைவர் சம்பந்தர் ஐயா சொன்னதைப்போல வடகிழக்கு எங்கும் 20 ஆசனங்களைப்பெற்றுக்கொள்வது தான் எமது தற்போதைய குறிக்கோள். அதற்காகவே நாம் அனைவரும் ஒன்று திரண்டு உழைக்கின்றோம். நாடாளுமன்றத்தேர்தலிலே போட்டியிடுகின்ற திரு.எம்.ஏ.சுமந்திரன் அவர்களைப்பலவீனப்படுத்திட வேண்டும் என்பது போன்ற கருத்தை நான் பதிவு செய்ததாக இணையத்தளம் ஒன்றிலே செய்தி இருந்தது. அப்படி மனதளவில் கூட நான் நினைப்பவன் அல்ல. மாறாக த.தே.கூட்டமைப்பில் போட்டியிடுகின்ற அத்தனை வேட்பாளர்களும் வெற்றிபெற வேண்டும் என்பதே எனதும், எமதும் நிலைப்பாடு.
ஏனெனில் எம்முடன் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் அனைவருமே ஏதோ ஒரு விதத்தில் தாம் சார்ந்த துறைகளிலே சாதனையாளர்களாக இருப்பவர்கள் தான். மக்களுக்காக விருப்பத்தோடு அர்ப்பணிப்போடு சேவை செய்பவர்கள் தான். அந்தவகையில்நாம் யாருக்கும் எதிராக எந்தவிதமான கருத்துக்களையும் எப்போதுமே கூறியவர்கள் கிடையாது. இந்நிலையில் மக்கள் மனங்களிலே கூட்டமைப்பைத்தவிர்த்து தாம் யாரும் குடியிருக்க முடியாது என்பதை உணர்ந்துகொண்டவர்கள் , கூட்டமைப்பினர் மீது உளவியல் ரீதியான தாக்குதல்களை ஆரம்பித்து இருக்கின்றனர்.
அந்த வகையில் தான் கூட்டமைப்பைப்பற்றி வந்த இந்தச்செய்தி மட்டுமல்ல இப்பொழுது வந்துகொண்டிருக்கின்ற, இனி வர இருக்கின்ற அத்தனை செய்திகளுமே தவறானவை மட்டுமல்ல வேண்டுமென்றே திட்டமிட்டு பரப்பப்படுபவை தான் என்பதை நாம் இதிலிருந்து உணர்ந்துகொள்ள முடியும். தேர்தல் நாள் நெருங்க நெருங்க முகமறியா இணையத்தளங்களிலும், போலி முகநூல்களிலும் இன்னும், இதைப்போல பல செய்திகள் வரலாம். எனவே இது விடயத்தில் மிகவும் எச்சரிக்கையுடனும், விழிப்புடனும் விடயமறிந்தவர்கள் ஏனையோருக்கும் தெளிவைக்கொடுத்து கூட்டமைப்பின் அமோக வெற்றியை உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
நன்றி

ad

ad