புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஆக., 2015

தீர்வை எட்டுவதில் சமஷ்டி தடையல்ல - ரணில்

ஐக்கிய தேசியக் கட்சியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் மாறுபட்ட நிலைப்பாட்டில் இருப்பதனூடாக தேசிய பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதில் தாமதம் ஏற்படாது என்றும் பேச்சினூடாக தீர்வைப்
பெற்றுக்கொள்வதற்கு எவ்விதத் தடையும் இல்லை என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
 
நாம் ஒருபோதும் ஐக்கியத்தைக் கைவிடவில்லை. ஐக்கிய இலங்கை என்பது ஒரே இலங்கையைத்தான் குறிக்கும். ஐக்கிய இலங்கைக்கும் ஒரே இலங்கைக்கும் (ஒற்றை ஆட்சி) இடையில் வித்தியாசமில்லை. ஐக்கி யப்படுத்துதல் என்பது அனைவரையும் ஒன்றிணைக்கும் அரசியல், கலாசார வேலைத் திட்டமாகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
 
பிபிசி சிங்கள இணையத்தளத்துக்கு வழங்கிய செவ்வியிலேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவற்றைத் தெரிவித்துள்ளார்.
 
தேசிய பிரச்சினைக்குத் தீர்வாக ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரத்தைப் பகிர்வதாகக் கூறிவந்த ஐக்கிய தேசியக் கட்சி, இனவாதமின்றித் தேர்தலில் வெற்றிபெற முடியாது என்பதனாலா இம்முறை ஒரே இலங்கை' (ஒற்றையாட்சி) என்ற நிலைப்பாட்டுக்கு மாற்றமடைந்தது என எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய இலங்கை என்பது ஒரே இலங்கையைத்தான் குறிக்கும். 
 
நாம் ஒருபோதும் ஐக்கியத்தைக் கைவிடவில்லை. ஐக்கியத்திற்கும், ஒற்றையாட்சிக்கும் இடையில் வித்தியாசமில்லை. ஐக்கியப் படுத்துதல் என்பது சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் வேலைத்திட்டம். அரசியல் வேலைத் திட்டம். கலாசார வேலைத் திட்டம். 
 
ஒற்றையாட்சி என்பது நீதிமன்ற நடவடிக்கையாகும்'' என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில், ஐக்கிய தேசியக் கட்சி ஒற்றையாட்சி தொடர்பில் அவதானம் செலுத்தும்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சமஷ்டி ஆட்சி முறைமையைக் கோரி  நிற்பதனூடாக தேசிய பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுக்

ad

ad