புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 ஆக., 2015

இரணைமடுத் திட்டத்தை விட ஆறுமுகம் திட்டம் சிறந்ததாம் : மணிவண்ணன்


இரணைமடுத் திட்டத்திற்கு பாரிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது .ஆனால் ஆறுமுகம் திட்டத்திற்கு பாரிய நிதி தேவையில்லை  இவ்வாறு தெரிவித்தார் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ்
வேட்பாளர் மணிவண்ணன்.
இன்று ஈரோவில் மண்டபத்தில் தேர்தல் தொடர்பான கேள்வித் தொகுப்பு நடைபெற்றபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இரணைமடுத்திட்டத்தின் மாற்றுத்திட்டமாகவே ஆறுமுகம் திட்டம் முன்வைக்கப்பட்டது.
ஆணையிரவு கடல் நீர் ஏரியில் ஆற்று நீரை உட்பாய்ச்சி, பின்னர் கடல் நீரை வெளியேற்றி அதன் மூலம் மக்களுக்கு நீர் விநியோப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.
மேலும் மருதங்கேணியில் கடல்நீரை நன்னீராக்கும் திட்டத்தால்  கடல்நீரில் இருந்து வரும்  உப்பு செறிவால் அதிகளவில் மீன்வளம் அழிந்து விடுகின்றது.
ஆகவே மருதங்கேணி மக்களின் வாழ்வாதாரமாக மீன்பிடி இருப்பதனால் கடல்நீரை நன்னீராக்கும் திட்டம் மருதங்கேணி மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதுடன் கடல்நீரை நன்னீராக்கும் பொழுது பாரிய பொருளாதார செலவும் ஏற்படும் என்றார்.

ad

ad