புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 ஆக., 2015

விசேட ஒலிம்பிக் - சிவபூமி மாணவர் சாதனை

Santhiramouleesan Laleesan 2 புதிய படங்கள் படங்களைச் சேர்த்துள்ளார்.

.
இன்று (01.08.2015) ஆறு.திருமுருகன் சேர் வழமையை விட உற்சாகமாகக் காணப்பட்டார். கடந்த நள்ளிரவின் பின்னர் கிடைந்த வெற்றிச் செய்தியால் கிடைத்த உற்சாக மேலீட்டால் தான்
உறங்கவில்லை என்றார்.
.
அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இடம்பெறும் விசேட ஒலிம்பிக் போட்டியில் யாழ்ப்பாணத்தில் இருந்து கலந்து கொண்ட ஜெயச்சந்திரன் மனோஜன் என்ற மாணவன் 200 மீற்றர் ஓட்டத்தில் 2 ஆம் இடத்தையும் அரசகுலசூரியன் மயூரன் என்ற மாணவன் 100 மீற்றர் ஓட்டத்தில் மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளனர். இந்த வெற்றி தந்த உற்சாகமே இவரது மகிழ்ச்சிக்குக் காரணம். இந்தச் செய்தியைக் கேட்ட மாத்திரத்தில் எமக்கும் மகிழ்ச்சி ஏற்பட்டது.
.
சிவபூமி என்ற நிறுவனத்தை ஆரம்பித்து இன்று இதன் அறுவடை உச்சத்தைத் தொட்டிருக்கின்றது. வீடுகளில் கிராமங்களில் ஏன் சாதாரண பாடசாலைகளில் ஒதுக்கப்பட்ட பிள்ளைகள் இன்று பலராலும் விதந்து திரும்பிப் பார்க்கப்படும் நிலைமையை எய்தியுள்ளனர்.
.
விசேட தேவையுடையோருக்கான ஒலிம்பிக் போட்டி இம்முறை யூலை 25 தொடக்கம் ஆகஸ்ட் 02 வரை கலிபோனியா மாநிலத்தில் உள்ள லொஸ்ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறுகின்றது. 165 நாடுகளில் இருந்து 6500 போட்டியாளர்கள் இதில் பங்கேற்கின்றனர்.
.
இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இப்போட்டிகள் 1968 ஆம் ஆண்டு முதல் நடைபெறுகின்றன. முதலாவது போட்டி சிகாகோ நகரில் நடைபெற்றது.
.
இவ்வாண்டில் இலங்கை அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஹெற்றியாதுர பெர்ணாந்து, பிரீத்திகா கமகே, சுரோகா கம்மடகே, அக்கோ ஜெயவர்த்தன, ஜெயசந்திரன் மனோஜன், அரசகுலசூரியன் மயூரன் ஆகியோர் சுவட்டு நிகழ்வுகளிலும் திலான் விதாரண பட்மின்ரன் நிகழ்விலும் கலந்து கொண்டனர்.
.
சிவபூமியில் இருந்து கலந்துகொண்ட மாணவர்களுக்கான பயிற்றுவிப்பாளராக யாழ். பல்கலைக்கழக உடற்கல்வி அலகின் விரிவுரையாளர் ம.இளம்பிறையன் செயற்பட்டுள்ளார். இத்தருணத்தில் எங்கள் சென்.ஜோன்ஸ் கல்லூரியின் மிகப்பற்றுமிக்க பழைய மாணவன் விரிவுரையாளர் திரு. ம. இளம்பிறையன் அண்ணருக்கும் எனது நல்வாழ்த்துக்கள்.

ad

ad