புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஆக., 2015

தேசிய அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் நியமனம்! ஜனாதிபதிக்கு முழு அதிகாரம


தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் பங்கேற்றல் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் நியமனம் தொடர்பான விடயங்களில் முடிவெடுக்கும் முழு அதிகாரம் ஜனாதிபதி மைத்திரிபாலவிடம் வழங்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று மாலை ஜனாதிபதியின் தலைமையில் கூடியபோது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கட்சியின் புதிய செயலாளராக துமிந்த திசாநாயக்க நியமிக்கப்பட்ட பின் நடைபெற்ற முதலாவது மத்திய குழுக் கூட்டம் இதுவாகும்.  அத்துடன் இந்தக் கூட்டத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டிருந்த மத்திய குழு உறுப்பினர்களும் சமூகமளித்திருந்தனர்.
தேசிய அரசாங்கம் அமைத்தல், அதில் பெற்றுக்கொள்ள வேண்டிய அமைச்சுப் பொறுப்புகள், அவை வழங்கப்பட வேண்டிய நபர்கள், என்பன குறித்தும், எதிர்க்கட்சித் தலைவர் நியமனம் குறித்தும் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் சுதந்திரக் கட்சி மத்திய குழுவினால் ஜனாதிபதியிடம் வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் முடிவை ஏகமனதாக ஏற்றுக் கொள்வதற்கும் சுதந்திரக் கட்சி மத்திய குழுவில் இணக்கம் காணப்பட்டுள்ளது.
சுதந்திரக் கட்சியை மறுசீரமைக்க விசேட குழு
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மறுசீரமைக்க விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று நடைபெற்ற விசேட மத்திய செயற்குழுக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
15 பேரைக் கொண்ட விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் சீ.பி. ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.
கட்சியை மீளமைத்து வெற்றியை உறுதி செய்யும் நோக்கில் இந்தக் குழு உருவாக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களுக்கு சீ.பி. ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.

ad

ad