புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 ஆக., 2015

சமஷ்டியை வாக்குகள் மூலம் தமிழ் மக்கள் ஏற்க வேண்டும் - த.தே கூட்டமைப்பு வலியுறுத்து - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=701924178002161997#sthash.Ue5sdTTh.dpuf

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன் வைத்துள்ள சமஷ்டித் தீர்வுத் திட்டத்திற்கு தமிழ் மக்கள் ஆதரவளிக்கின்றீர்களா? என்பதனை சர்வதேச நாடுகள் பார்த்துக் கொண்டிருக்கின்றன.
எனவே, தமிழ் மக்களின் வாக்குகள், தமிழர் பிரச்சினைக்கு முன்வைக்கப்பட்டுள்ள தீர்வை ஆதரித்து உறுதிசெய்வதாக அமையவேண்டும்.
 
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் யாழ்.மாவட்ட வேட்பாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
 
யாழ் முகாமையாளர் மன்றத்தின் ஏற்பாட்டில் 2015ஆம் ஆண்டின் பொதுத்தேர்தல் தொடர்பான கேள்விக் கொத்து நிகழ்வு நேற்றைய தினம் சகல கட்சிகளையும் உள்ளடக்கி நல்லூர் யூரோவில் மண்டபத்தில் இடம்பெற்றது.
 
இதன்போது 05 கேள்விகள் தொடர்பில் யாழில் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள், சுயேச்சைக் குழுக்கள் தமது நிலைப்பாட்டைத் தெரிவித்தனர்.
 
குஷீத்த இந்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் எம.ஏ.சுமந்திரன் கலந்து கொண்டு கருத்துரைக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்., 
 
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டுமே தமிழ் மக்களின் பிரச்சினைக்கு சாத்தியமான தீர்வாக சமஷ்டி முறையை முன்வைத்துள்ளது. அத்துடன் இந்தப் பொதுத் தேர்தலில் தேர்தல் விஞ்ஞாபனத்தையும் வெளியிட்டுள்ளது. 
 
ஆனால், இவை எதனையும் செய்யத் தைரியமும், திறமையும் இல்லாதவர்கள், எம்மைக் குறை கூஷீ காலத்தைக் கழிக்கின்றனர். தம்மிடம் எதுவும் சொந்தமாக இல்லாத வெறுமையின் காழ்ப் புணர்ச்சியை, போலியான குற்றச்சாட்டுகள் மூலம் வெளிப்படுத்துகின்றனர்.
 
போர் முடிந்தது முதல் நாம் மக்களுடன் இருக்கின்றோம். மக்களுக்காகப் பல போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். வழக்குகள் மூலம் மக்களுக்கு வெற்ஷீயும் பெற்றுக் கொடுத்தோம். ஆனால், இவை எதையுமே செய்யாமல் இருந்தவர்கள், தேர்தல் வந்ததும், திடீரென தூக்கத்தில் இருந்து விழித்தெழுந்தவர்கள் போன்று திடீர் என்று வடக்கு, கிழக்கில் முகாமிட்டு எம்மைத் திட்டித் தீர்த்துக் காலத்தை ஓட்டுகின்றனர். 
 
நேற்று வரை தமிழர்களைத் திரும்பிக்கூடப் பார்க்காத இவர்கள், தேர்தல் முடிந்த மறுகையோடு தமிழர்களை மறந்து விடுவார்கள்.
 
தமிழ் மக்களுக்காக எதையுமே செய்யாமல், வெறுமனே விமர்சித்துக்கொண்டும், குறை கூஷீக்கொண்டும் இருப்பது முறையல்ல. தம்மிடமுள்ள மாற்றீடு என்ன என்பதனைச் சொல்லவேண்டும். ஆனால், அவர்களால் சொல்லமுடியாது. ஏனெனில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்துள்ள தீர்வை விட சிறந்த சாத்தியமான தீர்வை இவர்களால் மட்டுமல்ல, யாராலும் முன்வைக்க முடியாது.
 
தமிழ் மக்கள் நாம் முன் வைத்துள்ள தீர்வை எந்த அளவு ஏற்றுக்கொள்கின்றார்கள் என்று சர்வதேசம் உன்னிப்பாகப் பார்த்துக்கொண்டு இருக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்துள்ள சமஷ்டித் தீர்வுத் திட்டத்திற்கு தமிழ் மக்கள் ஆதரவளிக்கின்றீர்களா என்பதனை உலக நாடுகள் பார்த்துக்கொண்டு இருக்கின்றன.
 
தமிழர்களில் யாராவது ஒரு சிலர் தமது வாக்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்காமல், தவஷீயேனும் கொள்கை இல்லாதவர்களுக்கு வழங்கினால், அவை தீர்வுக்கு எதிரான வாக்குகளாகப் பார்க்கப்படுவதுடன், தமிழர்களே தீர்வை விரும்பவில்லை என்று வழங்கிய அங்கீகாரமாகவும் கருதப்பட்டுவிடும் அபாயம் உள்ளது. 
 
ஆகவே, தமிழர்களின் வாக்குகள், தமிழர் பிரச்சினைக்கு முன்வைக்கப்பட்டுள்ள தீர்வை ஆதரித்து உறுதிசெய்வதாக அமையவேண்டும். வரலாற்ஷீன் ஒவ்வொரு தீர்க்கமான சந்தர்ப்பங்களையும் தவற விடாமல் முறையாகப் பயன்படுத்திக் கொள்ளல் வேண்டும் என்றார்.
 
சர்வதேச மற்றும் உள்ளக விசாரணைகள் தொடர்பாகவும், வடக்கு கிழக்கில் நிலைகொண்டுள்ள படையினரை அகற்றுவது தொடர்பிலும், படையினர் வசமிருக்கும் காணிகள், மற்றும் காணாமல் போனோர், சிறையிலிருக்கும் போராளிகள் குஷீத்து கேள்வி எழுப்பப்பட்டது.
 
இந்த கேள்விக்கு பதிலளித்த எம். ஏ. சுமந்திரன்,
போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்படும் தரப்பினர், போர்க்குற்றச்சாட்டு குஷீத்து விசாரணை செய்யக் கூடாது. அந்த வகையில் இலங்கை அரசாங்கத்திற்கு விசாரணை செய்யும் தகுதி இல்லை.
 
போரின் இறுதிக் கட்டத்திலே இரு தரப்பினராலும் மீறப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற வேண்டும்.
 
இவ்வாறு குற்றஞ்சாட்டப்பட்ட இருதரப்பினரில் ஒரு தரப்பினரால் விசாரணை நடத்தப்படக் கூடாது என்பதால் இலங்கை அரசாங்கம் போர்க்குற்ற விசாரணையை நடத்தக்கூடாது.
 
எந்தவொரு விசாரணையும் பக்கச்சார்பற்ற விசாரணையாக நடைபெறவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. எனவே பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்படவேண்டுமானால் அது சர்வதேச விசாரணையாகவே இருக்க வேண்டும் என்றும் கூஷீனார். 

ad

ad