புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 செப்., 2015

திருஷ்டி கழிக்க முயன்றபோது அசம்பாவிதம்: 10 மாதக் குழந்தை பலி


யானையொன்றின் காலில் மிதிபட்டு பத்து மாதக்குழந்தையொன்று பலியான சம்பவம் குருநாகல் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
கொக்கரல்ல பகுதியில் வசித்த பாலசந்திரன் ஆதித்யா எனும் குழந்தையே இவ்வாறு யானையின் காலில் மிதிபட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளது.இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
யானைகளின் வயிற்றுப் பகுதியின் கீழ் மற்றும் அதன் தும்பிக்கையின் கீழ்ப்பகுதி வழியாக சுற்றி வந்தால் கண்திருஷ்டி மற்றும் தோஷங்களில் இருந்து நிவர்த்திகிடைக்கும் என்பது இலங்கையின் ஒரு சில பகுதிகளில் வாழும் மக்களின் நம்பிக்கையாக உள்ளது.
இந்த நம்பிக்கையின் அடிப்படையில் பிரதேச விகாரையொன்றின் பெரஹரவுக்காக அழைத்து வரப்பட்டிருந்த யானையொன்றின் வயிற்றுப் பகுதியின் கீழாக குழந்தையை எடுத்துச் செல்ல முயன்றபோதே இந்த அசம்பாவிதம் நடைபெற்றுள்ளது.
குழந்தையை தூக்கிச்சென்ற உறவினர் கால்தடுக்கி விழுந்த நிலையில், குழந்தை ஆதித்யா யானையின் காலுக்குள் அகப்பட்டு மிதிபட்டு உயிரிழந்துள்ளது. குறித்த உறவினரும் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

ad

ad