புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 செப்., 2015

புங்குடுதீவு சூழகம் அமைப்பினரின் ஒற்றுமைக் கிண்ணம் உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டி

புங்குடுதீவு சூழகம் அமைப்பு நடத்தும்
தீவகம் ஒற்றுமைக் கிண்ணம் 2015 


போட்டி வகை - உதைபந்தாட்டம் ( ஆடவர் , மகளிர் )
விலகல் ( knock out ) முறைமை போட்டிகள் .
காலம் - 25 , 26 , 27 செப்டம்பர் 2015
காலை 9. 30
இடம் - சண் ஸ்டார் விளையாட்டு மைதானம் - மூன்றாம் வட்டாரம் , புங்குடுதீவு .
தலைமை - குணாளன் கருணாகரன் ( ஒருங்கிணைப்பாளர் - சூழகம் )
போட்டியில் வெற்றி பெறும்
அணிகளுக்கான் பரிசு விபரம் > ஆடவர் : முதலாமிடம் - தீவகம் ஒற்றுமைக்கிண்ணம் + 20000 ரூபாய்
இரண்டாமிடம் - சூழகம் கிண்ணம் + 10000 ரூபாய்
மூன்று , நான்காம் இடங்கள் - தலா 5000 ரூபாய்
மகளிர் : முதலாமிடம் - தீவகம் ஒற்றுமைக் கிண்ணம் + 10000
இரண்டாமிடம் - சூழகம் கிண்ணம் + 5000
மேற்படி போட்டித்தொடரின் பிரதான அனுசரணையாளராக புங்குடுதீவு மூன்றாம் வட்டாரத்தினை பிறப்பிடமாகவும் கனடாவினை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட திரு . ஜெகநாத் ( ஜெகன் ) பாக்கியநாதன் திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது .
முக்கிய குறிப்பு : போட்டிகளில் கலந்து கொள்பவர்களுக்கு மதிய உணவு மற்றும் போத்தலில் அடைக்கப்பட்ட குளிர்பானம் ( மாஷா மங்கோ ஜூஸ் ) வழங்கப்படும் . குளிர்பான அனுசரணையாளராக புங்குடுதீவு பத்தாம் வட்டாரத்தினைச் சேர்ந்த திரு . கஜன் ராஜேந்திரன் விளங்குகிறார் .
போட்டிகளில் பங்குபற்றும் அணிகள் கடும் தவறிழைத்தால் எதிர்வரும் காலங்களில் சூழகம் அமைப்பினால் நடாத்தப்படவுள்ள விளையாட்டு தொடர்களில் கலந்துகொள்ள அனுமதி மறுக்கப்படும் .
நிகழ்விற்கு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்
மேலதிக விபரங்களுக்கு
778 945856 - சூழகம்

ad

ad