புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 செப்., 2015

ஐ.நா பொதுச் சபை அமர்வில் மைத்திரி தலைமையில் பாரிய குழு பங்கேற்பு


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செப்டெம்பர் 15ஆம் திகதி ஆரம்பமாகும் ஐ.நா பொதுச் சபை அமர்வில் பங்கேற்கவுள்ளார். இந்த நிலையில், ஜனாதிபதியுடன் பாரிய பிரதிநிதிகள் குழு ஒன்று இந்த அமர்வில் பங்கேற்கவுள்ளதாக அறியமுடிகிறது.
நியுயோர்க்கில் அமைந்துள்ள இலங்கையின் ஐ.நாவிற்கான நிரந்தர வதிவிட அலுவலகத்தின் ஏற்பாடுகள் குறித்து பரிந்துரைக்கும் அறிவித்தல் விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.
அவ்வறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் இந்த விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளது.
செப்டெம்பர் 20ஆம் திகதி முதல் ஒக்டோபர் 4ஆம் திகதி வரை அலுவலகத்தின் தேவைக்கான வாடகை வாகனங்கள் தொடர்பில்,
குறித்த அலுவலகத்தின் உத்தியோபூர்வ இணையத்தளத்தில் வாடகை வாகனங்களுக்கான கட்டண மதிப்பீடு தொடர்பிலான அறிவித்தல் விளம்பரம் ஒன்று பிரசுரிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிவித்தலில் அலுவலகத்திற்கு தேவையான சொகுசு கார்கள், வான்கள் (van) மற்றும் சிறிய பேரூந்துகளின் எண்ணிக்கைகள், இருக்கைகள் குறித்த தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
குறித்த அறிவித்தல் விளம்பரத்தின் தகவல்களுக்கு அமைய 100ற்கும் மேற்பட்டோர் பயணிக்ககூடிய வகையில் வாகனங்கள் தேவைப்படுவதாகவே அறியமுடிகிறது.
மேலும் அனைத்து வாகனங்களும் 2012ஆம் ஆண்டிற்கு பின்னர் உற்பத்தி செய்யப்பட்டதாக இருக்க வேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வாகன சாரதிகள் ஆங்கில அறிவுடையவர்களாகவும் நியுயோர்க் நகர் பற்றி தெரிந்தவர்களாகவும், சாரதிகளுக்கான சீருடையுடன் இருக்க வேண்டுமெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த அரசாங்கத்தைப் போல் புதிய அரசாங்கமும் மிகப் பெரிய பிரதிநிதிகள் குழு ஒன்றை பொதுச் சபை அமர்வில் பங்கேற்கச் செய்யவுள்ளதா? என கொழும்பு அரசியல் மட்டத்தில் கேள்வி எழுந்துள்ளது.
கடந்த காலங்களில் இடம்பெற்ற ஐ.நா பொதுச் சபை கூட்டங்களில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த தனது பரிவாரங்களுடன் கலந்துகொண்டதுன், அதற்கென அரசாங்கம் பாரிய நிதியை செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது.

ad

ad