புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 செப்., 2015

இந்திய மீனவர்களின் எல்லை தாண்டும் அட்டகாசத்திற்கு தீர்வு பெற்றுத் தரக் கோரி யாழில் முற்றுகைப் போராட்டம்

வடபகுதியில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் தொடர்பிலான பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுத் தரக்கோரி எதிர்வரும் 23ஆம் திகதி யாழ்
.மாவட்டச் செயலகம் மற்றும் யாழ்.கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்களம் ஆகியவற்றை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படவுள்ளதாக யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தலைவர் அந்தோனிப்பிள்ளை எமிலியாம்பிள்ளை தெரிவித்தார். 

இன்று  நடைபெற்ற மீனவர் சங்கங்களுக்கிடையிலான கலந்துரையாடலின் முடிவில் ஊடகவியலாளர்களுக்கு கருத்துக் கூறுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் தொடர்பில் 2013 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியான பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டும், இதுவரையில் எந்தவித தீர்வும் எட்டப்படவில்லை. 2010 ஆம் ஆண்டு இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது, மாற்றுத் தொழில்களைச் செய்வதாக இந்திய மீனவர்கள் தெரிவித்திருந்தும், அது நடைமுறைப்படுத்தப்படாமல், தொடர்ந்தும் இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி வருகின்றனர்’ எனச் சுட்டிக்காட்டினார். 

‘சுண்டிக்குளம், தாளையடி, மயிலிட்டி போன்ற பகுதிகளில் கடந்த சில தினங்களாக, இந்திய மீனவர்களின் எல்லை தாண்டு அட்டகாசம் அதிகரித்துள்ளது. இதற்கு தீர்வு எட்டப்படவேண்டும் என்ற கட்டாயம் உள்ளமையால், இன்றைய தினம் குறித்த கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு, மேற்படி தீர்மானம் எட்டப்பட்டது. இது தொடர்பில் பேச்சுவார்த்தைக்கு நாங்கள் செல்லத் தயாராக இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ad

ad