புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 அக்., 2015

2015ம் ஆண்டின் பாராளுமன்ற தேர்தலில் கீழ்சபை உறுப்பினர் பதவிக்காக வெற்றி பெற்ற கட்சிகளின் பட்டியல்


சுவிட்சர்லாந்து நாட்டில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், இந்த தேர்தலின் வெற்றி முடிவுகள் அந்நாட்டை இரண்டாக பிரித்துவிட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சுவிஸ் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றதை தொடர்ந்து அதன் முடிவுகள் நள்ளிரவில் தொடங்கி இன்று முழுமையாக வெளியாகியுள்ளது.
கருத்து கணிப்புகள் தெரிவித்திருந்ததை விட அந்நாட்டின் வலது சாரி கட்சியான சுவிஸ் மக்கள் கட்சி அபார வாக்குகள் பெற்று 65 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது.
இதற்கு அடுத்த நிலையில், FDP எனப்படும் லிபரல் கட்சியும் கருத்து கணிப்புகளை கடந்து 33 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
தீவிர வலது சாரி கட்சிகளான இவ்விரு கட்சிகளின் கொள்கைகளும் முரண்பட்டு காணப்படுகிறது. சுவிஸ் மக்கள் கட்சி புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிரான கொள்கையையும், லிபரல் கட்சி ‘வாழ்வாதாரத்திற்காக நாடு விட்டு நாடு சென்று வாழ்வது மக்களின் உரிமை’ என கூறிவருகிறது.
எனினும், இவ்விரு கட்சிகளும் தனி பெரும்பான்மையை பெற்றுள்ளது சிறப்புடையதாக இருந்தாலும் கூட, இந்த வெற்றி சுவிஸ் நாட்டை இரண்டாக பிளப்பதற்கு காரணமாக அமையும் என்ற அச்சமும் எழுந்துள்ளது.
சுவிஸில் வெளியாகும் Tages-Anzeiger என்ற பத்திரிகை தலையங்கம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், பாராளுமன்ற தேர்தலில் இரண்டு கட்சிகள் அபாரமாக வெற்றி பெற்றுள்ள நிலையில், மற்ற இரண்டு முக்கிய கட்சிகள் மோசமான பின்னடவை சந்தித்துள்ளது.
கிரீன் கட்சி ஏற்கனவே பெற்றிருந்த 15 தொகுதிகளிலிருந்து இந்த தேர்தலில் 11 தொகுதிகளாக கீழ் நோக்கி இறங்கியுள்ளது.
கிரீன் லிபரல் கட்சியானது ஏற்கனவே பெற்றிருந்த 12 தொகுதிகளிலிருந்து தற்போது 7 தொகுதிகளுக்கு பின்னோக்கி சென்றுள்ளதால், புதிய அரசாங்கத்தை உருவாக்குவதில் நிச்சயமாக பிளவு ஏற்பட வாய்ப்புள்ளது.
காரணம், சுவிஸ் மக்கள் கட்சி 65 தொகுதிகளும் லிபரல் கட்சி 33 தொகுதிகளும் பெற்றுள்ள நிலையில் இவ்விரு கட்சிகளும் புதிதாக அமைய உள்ள அரசாங்கத்தில் அதிக பெரும்பான்மை மற்றும் செல்வாக்கை எதிர்பார்க்கும்.
ஆனால், ஏற்கனவே பெற்றிருந்த தொகுதிகளையும் இழந்துள்ள கிரீன் மற்றும் கிரீன் லிபரல் கட்சிகள் தங்களுக்கான வாய்ப்புகளை இழந்து தீவிர எதிர்க்கட்சியாக செயல்படுமானால் சுவிஸ் அரசியலில் ஸ்திரத்தன்மை நிச்சயமாக ஏற்படாது என்பதை அந்த பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.
சுவிஸ் மக்கள் கட்சி கூடுதலாக ஒரு அமைச்சரவை வழங்க வேண்டும் என ஏற்கனவே வலியுறுத்தியுள்ள நிலையில் மேற்கூறிய கணிப்புகள் உண்மையாக நிகழ வாய்ப்புள்ளது.
பாராளுமன்றத்தில் எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான சிறப்பு கூட்டம் கூடி, மேல் சட்டசபைக்கான 46 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.
இந்த கூட்டத்தில் எந்த பாகுபாடும் இல்லாத நம்பகத்தனமையுள்ள வேட்பாளர்களுக்கு மட்டும் முக்கியத்துவம் அளித்தால் சுவிட்சர்லாந்து இரண்டாக பிரிவதை தடுக்கலாம் என ஊடகங்கள் கருத்து தெரிவித்துள்ளன.
2015ம் ஆண்டின் பாராளுமன்ற தேர்தலில் கீழ்சபை உறுப்பினர் பதவிக்காக வெற்றி பெற்ற கட்சிகளின் பட்டியல்:
1. சுவிஸ் மக்கள் கட்சி – 65 தொகுதிகள்(முந்தைய தேர்தலில் 54)
2. சமூக ஜனநாய கட்சி – 43(46)
3. லிபரல் கட்சி - 33 (30)
4. கிறித்துவ ஜனநாயக கட்சி - 28 (29)
5. கிரீன் கட்சி - 11 (15)
6. கிரீன் லிபரல் கட்சி - 7 (12)
7. கன்சர்வேட்டிவ் ஜனநாயக கட்சி - 7 (9)
8. டிசினோ லீக் கட்சி - 2 (2)
10. எவான்ஜிலிக்கல் மக்கள் கட்சி - 2 (2)
11. ரோமண்டை மக்கள் இயக்கம்(MCR) - 1 (1)
12. மாற்று இடதுசாரி கட்சி - 1 (0)

ad

ad