புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 அக்., 2015

சுவிஸ் பாராளுமன்ற தேர்தலில் முதல் முறையில் அதிகளவிலான வாக்குகளைப் பெற்ற தர்சிகா



தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை எப்பொழுதும் முன்வைத்தே சுவிஸ் அரசியலில் ஈடுபடுவேன் என சுவிஸ் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு அதிக வாக்குகளைப் பெற்ற  தர்சிகா தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் 24 செய்திச் சேவைக்கு வழங்கிய விசேட நேர்காணலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இவர் பாராளுமன்றத்திற்கான தகுதியை இழந்திருப்பினும் போட்டியிட்ட வெளிநாட்டவர்களுள் அதிகளவிலான வாக்குகளைப் பெற்றுள்ளதுடன் 25 பேர் கொண்ட பெண்கள் அணியின் சார்பில் 15வது இடத்திற்கு முன்னேறியுள்ளமை குறிப்பிடத்த்க்கது.
மேலும் இதில் இத் தேர்தலில் போட்டியிட்ட அநேகமான வேட்பாளர்கள் 2ம், 3ம் முறையும் போட்டியிட்டுள்ளனர்.. அவர்களையும் பிந்தள்ளி ஈழத் தமிழ் பெண் வேட்பாளரான தர்சிகா அதிக வாக்குகளைப் பெற்றுள்ளமை போட்டியிட்ட ஏனைய வெளீநாட்டவர்கள் மத்தியில் அபரிதமான வளர்ச்சியைக் காட்டுவதாக சுவிஸ் அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் இவர் போட்டியிட்ட  SP கட்சி எதிர்வரும் காலங்களில் கட்சி சார்ந்த ஒரு முக்கிய பதவியை தர்சிகாவுக்கு வழங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
மேலும் இவ் வருட இறுதியில் தூண் மாநகர சபை உறுப்பினர் பதவியும் தர்சிகாவுக்கு கிடைக்கவுள்ளமையும் இங்கு குறிப்ப்டத்தக்கது.
அவரின் முழுமையான நேர்காணல் தொகுப்பு இங்கே இணைக்கப்பட்டுள்ளது.

ad

ad