புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 அக்., 2015

புனர்வாழ்வை ஏற்குமாறு கைதிகளை கோரும் அமைச்சர் விஜயகலா

ஜனாதிபதி எதிர்வரும் மாதம் 7ஆம் திகதி தமிழ் அரசியல் கைதிகளுக்கான நிரந்தரத் தீர்வைப் பெற்றுத் தருவதாக உறுதிமொழியளித்துள்ளார்.எனினும்
அவர் கைதிகளை எந்த விதத்தில் விடுதலை செய்யப்போகின்றார். தற்பொழுது இருக்கும் அரசியல் சூழ்நிலை காரணமாக பொதுமன்னிப்பு வழங்க முடியாத நிலையில் ஜனாதிபதி இருக்கின்றார்.எனவே தான் அரசிற்கு வலியுறுத்தி இருக்கிறேன் பொதுமன்னிப்பு வழங்க முடியாவிட்டாலும் புனர்வாழ்வளிக்கும் படி குறிப்பிட்டிருக்கிறேன்.அத்தோடு கைதிகளிடமும் புனர்வாழ்வை ஏற்கும்படி கோரியுள்ளதாக சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா தெரிவித்தார்.

இன்றைய தினம் யாழ்.சிறைச்சாலைக்குச் சென்று யாழ்.சிறைச்சாலை தலைமை அதிகாரி அநுர சந்திரால் பெரேராவை சந்தித்து கலந்துரையாடிய பின்னர் உண்ணாவிரதம் இருந்த கைதியையும் சந்தித்து கலந்துரையாடி உண்ணாவிரத்தை முடித்து வைத்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
தற்போதைய சூழ்நிலையில் ஜனாதிபதி பொதுமன்னிப்பை வழங்க முடியாவிட்டாலும் குறுகிய காலம் அதாவது,3அல்லது 6ஆறுமாதங்களுக்கு கைதிகள் புனர்வாழ்வளிக்கப்பட்ட பின்னர் விடுதலை செய்யுமாறு குறிப்பிட்டிருக்கிறேன்.அத்தோடு கைதிகளிடமும் புனர்வாழ்வை ஏற்குமாறு கோரியுள்ளேன்.ஏனெனில் அனைத்தையும் நேரடியாக அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்க்கமுடியாது.
ஏனெனில் கடந்த காலங்களில் முன்னாள் போராளிகள் 12,000பேருக்கு புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். ஆனால் சந்தேகத்தின் பேரில் கைதான தமிழ் கைதிகள் குற்றம் புரிந்துள்ளார்கள் என்பது தொடர்பில் இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை.ஆகவே கைதிகளுக்கு பொதுமன்னிப்பு அளிக்க முடியாதுவிட்டாலும் அவர்களுக்கு புனர்வாழ்வளித்து விடுதலை செய்து குடும்பங்களுடன் ஒன்றிணைந்து வாழ ஜனாதிபதி உறுதியளிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

ad

ad