புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 அக்., 2015

விஜயகாந்திடம் ஆதரவு கேட்பீர்களா? மீண்டும் திமுவுக்கு போகிறீர்களா? : வடிவேலு பரபரப்பு பதில்


நடிகர் சங்கத்தேர்தலில் விஷால் அணியினரின் பாண்டவர் அணிக்கு, மதுரையில் உள்ள நாடக நடிகர்களிடம் ஆதரவு திரட்டினார் வடிவேலு.  பின்னர் அவர் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

ஏன் விஷால் அணியினரை ஆதரிக்கிறீர்கள்?

’’வெறும் கேட்’டுதான் இருக்குது.  சங்கத்தை காணோம்.  காணாமல் போன நடிகர் சங்கத்தை கண்டுபிடிக்கவே விஷால் அணியில் நாங்க சேர்ந்திருக்குறோம்.  களவு போன நடிகர் சங்கத்தை கண்டுபிடிக்கத்தான் விஷால் அணியில் சேர்ந்திருக்கிறோம்.  

சமரச பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறதே எதிரணி?

சமரச பேச்சுவார்த்தைக்கே இடமில்லை.  வெற்றி தோல்வி யாருக்கு என்பதுதான் இனி இந்த பாண்டவர் அணி எல்லா நடிகர்களுக்கும் நல்லது செய்யும் ஆண்டவர் அணி.  

முன்பு தேர்தல் சமயத்தில்தான் அரசியலுக்கு வந்தீர்கள்.  மீண்டும் தற்போது தேர்தல் நேரத்தில் வந்திருப்பது அரசியல் நோக்கத்திலா? 

அந்த நேரத்தில் நடந்தது வேறு.  அந்த அரசியலை இதில் கலக்க வேண்டாம்.  

ஒதுங்கியே இருக்கணுமா நான்.   வடிவேலு படமே இருக்குறாரு.  அவரு எங்கள மிரட்டுறாருன்னு சொல்றாங்க.  படமே இல்லாம இருக்குறேன்னு நீ சந்தோசப்படுகிறியா? வருத்தப்படுறியா?  நீ வருத்தம்தான் படணும்.  படமே இல்லாம இருக்குறவரு எங்கள கேள்வி கேட்குறாருன்னு கேட்குறாங்க.  அது தப்பான வார்த்தை இல்லையா?   

நாடக நடிகர்கள் வாக்குதான் அதிகம் இருக்கிறது.  உங்களுக்கு இருப்பதுபோல் சரத்குமார் அணியினருக்கும் சம அளவில் நாடக நடிகர்களின் ஆதரவு இருக்கிறது. நாடக நடிகர்களின் ஒட்டுமொத்த ஆதரவும் தங்களுக்குத்தான் வரும் என்று ராதாரவி கூறியிருக்கிறார்.  உங்களுக்கு ஆதரவு கிடைக்கும் நீங்கள் நம்புகிறீர்களா?

18ம் தேதி வாக்குப்பதிவில் தெரியும்..அத்தனை நாடக நடிகர்களின் ஆதரவும் யாருக்கு என்று.  

விஷால் அணியினர் பணம் கொடுத்து வாக்கு சேகரிக்கிறார்கள் என்று எதிர் அணியினர் குற்றம் சாட்டுகிறார்களே?

நாங்க பணம் கொடுக்குறோமா?  ஏங்க.. நொந்து போய் கிடக்கிறோம்.  

நடிகர் சங்க தேர்தலில் விஜயகாந்திடம் ஆதரவு கேட்பீர்களா? என்று சொன்ன நிருபரைப் பார்த்து, ’அந்த கடையை மூடுங்க’ என்று பதில் சொல்ல மறுத்தார் வடிவேலு.

போனமுறை திமுகவுக்கு ஆதரவளித்தீர்கள்? வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கு உங்களின் ஆதரவு?

எந்த கட்சிக்கும் போகப்போவதில்லை.  நடிகர் சங்க தேர்தல் மட்டும்தான் என் கவனம்.  தீவிர அரசியலில் எனக்கு ஈடுபாடு கிடையாது.  நான் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன்.  ஏன் திமுகவிற்கு போனேன் என்பது எல்லோருக்கும் தெரியும்.  அதை முதல்ல இருந்து சொல்ல வேண்டிய அவசியமில்ல

ad

ad