புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 அக்., 2015

வைகோவுக்கு தொடரும் பின்னடைவு- மக்கள் நலன் கூட்டியக்கத்தை கூட்டணியாக மாற்றுவதா? தா.பா. போர்க்கொடி Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/pwf-not-electoral-alliance-opposes-d-pandian-237347.html

ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோவை ஒருங்கிணைப்பாளராகக் கொண்ட மக்கள் நலன் கூட்டியக்கத்தை
தேர்தல் கூட்டணியாக மாற்றுவதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ம.தி.மு.க, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி மற்றும் காந்திய மக்கள் இயக்கம் ஆகிய 6 கட்சிகள் இணைந்து மக்கள் நலனுக்கான கூட்டியக்கமாக உதயமானது. ஆனால் இந்த கூட்டியக்கத்தின் தொடக்கத்திலேயே காந்திய மக்கள் இயக்கம் கழன்று கொண்டது. பின்னர் 5 கட்சிகளைக் கொண்ட கூட்டியக்கமாக இது செயல்பட்டு வந்த நிலையில் இதை அப்படியே சட்டசபை தேர்தலுக்கான கூட்டணியாக மாற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கு மனித நேய மக்கள் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து கூட்டியக்கத்தில் இருந்து விலகியது.


ad

ad