புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 நவ., 2015

புலிகளின் தலைவர் சரணடைந்திருந்தால் புனர்வாழ்வு அளித்திருப்போம்: கோத்தா


விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் சரணடைந்திருந்தால், அவருக்கும் புனர்வாழ்வு அளித்திருப்போம் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அண்மைக்காலமாக மேர்வின் சில்வா போன்றோரினால் சுமத்தப்பட்டு வருகின்ற தன் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் எஸ்.புலித்தேவனுடன் தாம் தொடர்புகளை பேணி வந்ததாக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டில் எவ்வித உண்மையும் இல்லை.
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தம்மீது சுமத்தியுள்ள கடத்தல் மற்றும் ஏனைய குற்றச்சாட்டுக்களிலும் எவ்வித உண்மையும் கிடையாதென அவர் குறிப்பிட்டுள்ளார். 
மேலும், வெள்ளைவான் கடத்தல்களில் தமக்கு தொடர்பு கிடையாதென தெரிவித்த கோத்தா, 1986ஆம் மற்றும் 1989ஆம் ஆண்டுகளில் கலர் வான்களில் பெரும் எண்ணிக்கையிலான இளைஞர் யுவதிகள் தெற்கில் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட வரலாற்றை முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா மறந்துவிட்டு தம் மீது குற்ஞ்சுமத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன், யுத்த நிறைவின்போது 5000 பேர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் தாம் பதவியை விட்டு ஓய்வு பெற்றுக்கொண்ட போது அந்த எண்ணிக்கை 270ஆக குறைவடைந்திருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கடுமையான பயங்கரவாத குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களே கைது செய்யப்பட்டு தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மஹிந்த அரசாங்கம் துணை இராணுவக் குழுக்களை உருவாக்கவில்லையெனவும் கோத்தபாய தெரிவித்துள்ளார்.
யுத்த வெற்றியினால் புலம்பெயர் தமிழ் சமூகமே அதிருப்தி கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளதோடு, ஐ.நா மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கியதால் நாடு சிக்கலை எதிர்நோக்க வேண்டி ஏற்படும் எனவும் கோத்தா குறிப்பிட்டுள்ளார்.

ad

ad