புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 நவ., 2015

பாடகர் கோவனை விடுவிக்க கோரிய ஆட்கொணர்வு மனு தள்ளுபடி: சென்னை ஐகோர்ட் உத்தரவு



மதுவிலக்கை அமல்படுத்த கோரி மக்கள் கலை இலக்கிய மாமன்றம் சார்பில் விழிப்புணர்வு பாடல்கள் வெளியிடப்பட்டது. அந்த பாடலில், முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக விமர்சனம் செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தேசத் துரோகம் வழக்குப்பதிவு செய்து, பாடலை எழுதி, பாடி, நடித்த கோவனை கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையில், கோவனின் நண்பர் வெங்கடேசன், சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். கைது நடவடிக்கையில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளது. கோவனை விடுதலை செய்யவேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி ஆர்.சுதாகர், பி.என்.பிரகாஷ் முன்பு 02.11.2015 திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், ‘கோவன் கைது சம்பவத்தில் போலீசார் சட்டப்படி நடந்துள்ளனர். சட்டப்படி வழக்குப்பதிவு செய்து, முறையாக கைது செய்துள்ளனர். இதில் விதிமீறல் எதுவும் இல்லை’ என்ற வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘கைது நடவடிக்கையில் விதிமீறல் எதுவும் இல்லை என்பதால், மனுவை தள்ளுபடி செய்கிறோம். கைது செய்யப்பட்டவருக்கு ஜாமீன் கோரி சம்பந்தப்பட்ட கோர்ட்டை மனுதாரர் அணுகலாம்’ என்று கூறியுள்ளனர்.

ad

ad