புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 டிச., 2015

சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கிய நிறுவனங்கள்

 

உணவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வினியோகம் செய்ய தமிழக அரசிடம் வழங்கப்பட்டு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள 7-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் அனுப்பியிருக்கும் நிவாரணப் பொருட்களின் விபரம் பின்வருமாறு:-

நெஸ்ட்லே இந்தியா நிறுவனம் 10 மெட்ரிக் டன் மேகி நூடுல்ஸ், 5 ஆயிரம் லிட்டர்கள் டெட்ரா பேக்கிங் செய்யப்பட்ட பால், 50 ஆயிரம் காபி பாக்கெட்டுகளை நிவாரண உதவிக்காக வழங்கியுள்ளது. மேலும், 25-30 மெட்ரிக் டன் நூடுல்ஸ்களையும், 8 மெட்ரிக் டன் மன்ச் மற்றும் 800 கிலோ சன்ரைஸ் பிஸ்கட்டுகளையும் வழங்க தயாராகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொக கோலா நிறுவனம் 50 ஆயிரம் ஒரு லிட்டர் குடிநீர் பாட்டில்களையும், பெப்ஸிகோ
3,163 அட்டைப்பெட்டிகளில் பிஸ்கட்டுகளை 6 லாரிகளில் சென்னை வெள்ள நிவாரணத்திற்காக ஐ.டி.சி. நிறுவனம் அனுப்பியுள்ளது. எம்.டி.ஆர் நிறுவனம் 14,128 தயார் நிலை உணவுப் பொட்டலங்களை வெள்ள நிவாரணத்திற்காக வழங்கியுள்ளது. மேலும், 35 ஆயிரம் தயார் நிலை உணவுப் பொட்டலங்களை நாளை இரவிற்குள் வினியோகம் செய்யவும் முடிவு செய்துள்ளது.

345 அட்டைப்பெட்டிகளில் பிஸ்கட்டுகளை 3 லாரிகளில் பிரிட்டானியா நிறுவனம் இன்று அனுப்பியிருப்பதாகவும், மேலும் 2 லாரிகளில் உணவுப் பொருட்களை அனுப்ப தயாராகி வருவதாகவும் உணவுத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.


நிறுவனம் 12 ஆயிரம் ஒரு லிட்டர் குடிநீர் பாட்டில்களையும் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பார்லே நிறுவனம் 3 லாரிகளில் பிஸ்கட்டுகளை அனு்ப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கிய நிறுவனங்கள்

ad

ad