புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

7 டிச., 2015

யோஷித்தவையும், தாய் ஷிரந்தியையும் பாதுகாப்பது தொடர்பில் பேரம் மகிந்த ஒய்வு /நாமல் பேச்சு


யோஷித்த ராஜபக்ஷவைப் பாதுகாக்கும் நோக்கில் அரசியலில் இருந்து ஓய்வுபெற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
பிரபல ரகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீனின் படுகொலைச் சம்பவத்தில் யோஷித்த ராஜபக்ஷ நேரடியாக தொடர்புபட்டிருப்பதற்கான சாட்சியங்கள் வெளிவரத் தொடங்கியிருப்பதை அடுத்து மஹிந்த ராஜபக்ஷ இந்த முடிவை எடுத்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த புதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ அண்மையில் அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்கவுடன் இது தொடர்பான பேச்சுவார்த்தையொன்றை மேற்கொண்டுள்ளார்.
வசீம் தாஜுதீனின் படுகொலைச்சம்பவத்தின் குற்றச்சாட்டிலிருந்து தனது தம்பி யோஷித்தவையும், சிரிலிய சவிய அமைப்பின் நிதிமோசடிக் குற்றச்சாட்டுகளிலிருந்து தனது தாய் ஷிரந்தியையும் பாதுகாப்பது தொடர்பிலான உத்தரவாதமொன்றை ஜனாதிபதியிடமிருந்து பெற்றுத் தருமாறு நாமல் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவ்வாறான உத்தரவாதம் கிடைக்கும் பட்சத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு சுதந்திரக் கட்சியின் செயல்பாடுகளை எதுவித இடையூறுகளும் இல்லாது முன்னெடுத்துச் செல்ல வழிசெய்யும் வகையில் மஹிந்த ராஜபக்ஷ தனது அரசியல் செயற்பாடுகளிலிருந்து ஓய்வுபெற்றுக்கொள்வார் என்றும் நாமல் உறுதியளித்துள்ளார்.
இதற்கான நல்லெண்ண சமிக்ஞையை வெளிப்படுத்தும் வகையிலேயே வரவு செலவுத்திட்டம் மீதான வாக்கெடுப்பின் போது மஹிந்த வாக்களிப்பதில் இருந்தும் தவிர்ந்து கொண்டுள்ளார்.
தற்போது மஹிந்தவின் கோரிக்கை தொடர்பில் சுதந்திரக் கட்சி முக்கியஸ்தர்களிடமிருந்து ஆதரவையும் , ஜனாதிபதியின் உத்தரவாதத்தையும் பெற்றுக் கொள்ளும் வகையில் அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளமை குறித்தும் தெரிய வந்துள்ளது.