புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 டிச., 2015

அரச மற்றும் தனியார் பேருந்து நடத்துனர்களுக்கிடையே யாழில் கைகலப்பு

அரச மற்றும் தனியார் பேருந்து நடத்துனர்களுக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பால் பொதுமக்கள் பெரும் சிரமங்களுக்கு ஆளாகினர்.

குறித்த சம்பவம் இன்று காலை பரமேஸ்வரா சந்தி பேருந்து தரிப்பிடத்தில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவது,
புன்னாலைக்கட்டுவான் பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் வந்து கொண்டிருந்த அரச மற்றும் தனியார் பேருந்துகளில் அரச பேருந்து பரமேஸ்வரா சந்தி பேருந்து தரிப்பிடத்தை முதலில் வந்து சேர்ந்து பயணிகளை ஏற்ற ஆயத்தமாக இருந்தவேளை அரச பேருந்துக்கு முன்னால் தனியார் பேருந்து நிறுத்தப்பட்டு மக்களை ஏற்றிச் செல்ல விடாது தடுத்துள்ளது. இதனால் அரச பேருந்து நடத்தனர் மற்றும்; தனியார் பேருந்து நடத்தனர்களுக்கிடையில் கைகலப்பு ஏற்பட்டதால் அங்கு பெரும் பதற்ற நிலை உருவாகியது.

குறித்த கைகலப்பின் போது அரச பேருதுந் நடத்துனரின் பணம் மற்றும் டிக்கெட்டுக்கள் வீதியில் சிதறியது.

மேலும் குறித்த சம்பவ இடத்திற்கு வந்த கோப்பாய் பொலிஸார் அரச மற்றும் தனியார் பேருந்து சாரதி அனுமதிப்பத்திரங்களை சோதனையிட்டு விசாரணை மேற்கொண்ட பின்னர் இரண்டு பேருந்துகளையும் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்தச் சென்றனர்.

இதேவேளை இவ்வாறான பேருந்து நடத்துனர் அல்லது சாரதிகளின் தவறால் மக்கள் பெரும் சிரமங்களுக்குள்ளாகின்றனர். எனவே இவ்வாறான பிரச்சினைகள் அடிக்கடி யாழ்.மாவட்டத்தில் இடம்பெற்று வருகின்றது. எனவே குறித்த பிரச்சினை தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனமெடுத்து உடனத் தீர்வைப் பெற்றுத்தருமாறும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

ad

ad