புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

2 ஜன., 2016

புதிய ஆயர் தெரிவு தொடர்பான செய்தியில் உண்மையில்லை!: மன்னார் ஆயர் இல்லம் மறுப்பு!

மன்னார் மறைமாவட்ட புதிய ஆயர் தெரிவு தொடர்பாக நால்வரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்தியில் உண்மை இல்லை என மன்னார் ஆயர் இல்லம் மறுத்துள்ளது.

இன்று ஊடகங்களில் குறித்த செய்தி வெளியாகியிருந்தது குறித்த செய்தியில் மன்னார் மாறை மாவட்ட புதிய ஆயர் தெரிவுக்கென நால்வரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும், இதன்படி மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி.விக்டர் சோசை, மடு தேவாலயத்தின் பரிபாலகர் அருட்பணி எமில், அருட்பணி ஜெயபாலன், அருட்பணி தேவராஜா கொடுதோர் ஆகியோரது பெயர்களே பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் மன்னார் ஆயர் இல்ல உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றது என செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

எனினும் குறித்த செய்தியினை ஆயர் இல்லம் மறுப்பு தெரிவிப்பதாக மன்னார் மறை மாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை விக்டர் சோசை அவர்கள் தெரிவித்தார்.

அது தொடர்பாக மன்னார் மறை மாவட்ட குருமுதல்வர் அறிக்கை ஒன்றினை வெயிட்டுள்ளார்.

அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
ஆயர் தெரிவில் கத்தோலிக்க திருச்சபையின் மரபுகளுக்கும் மற்றும் பாரம்பரியமான நடைமுறை கோட்பாடுகளுக்கும் அமையவே செய்யப்படுகின்ற காரியமாகும்.

இத் தெரிவில் இரகசியம் பேணப்படுவது வழமை, ஆனால் குறித்த செய்தி வெளியிடப்பட்டது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆயர் தெரிவில் பாப்பரசரின் தெரிவு என்பது முற்றுமுழுவதுமாக திருபீடத்தை சார்ந்தது.  நாங்கள் ஆயர் தெரிவு குறித்து யாரையும் எதிர்வு கூறமுடியாது.