புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

2 ஜன., 2016

இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஞ்சாப் விமானப் படைத்தளத்தில் தீவிரவாதிகள் தாக்குதல்! 7 பேர் பலி

 மாநிலம், பதான்கோட் மாவட்டத்தில் உள்ள சக்கி ஆற்றங்கரையோரம் உள்ள இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமான தளம் இன்று அதிகாலை சுமார் 3.30 மணியளவில் அந்த விமான தளத்துக்குள் நான்கு தீவிரவாதிகள் ஊடுருவினர்.
இதை கண்ட பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகளை எச்சரிக்கும் விதமாக துப்பாக்கிகளால் சுட்டனர்.
ஆயுதங்களுடன் வந்திருந்த தீவிரவாதிகளும் பதிலுக்கு துப்பாக்கிகளால் சுட்டு எதிர்த்தாக்குதல் நடத்தினர். இருதரப்பினரிடையே நெடுநேரம் நீடித்த துப்பாக்கிச் சண்டையில் நான்கு தீவிரவாதிகளை விமானப்படையை சேர்ந்த பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.
தீவிரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டில் பாதுகாப்பு படையை சேர்ந்த மூன்று பேர் வீரமரணம் அடைந்தனர்.
பஞ்சாப்பில் ஆதிக்கம் செலுத்திவரும் ஜெய்ஷ்-இ-முஹம்மத் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் இன்றைய தாக்குதலை நடத்தி இருக்கக்கூடும் என பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் சந்தேகிக்கின்றன.
பதான்கோட் விமானப்பட தளத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான எம்.ஐ.ஜி.-21 மற்றும் எம்.ஐ.-25 ரக ஹெலிகாப்டர்கள் நிறுத்தி வைக்கப்படுகின்றன.
போர்காலங்களில் பயன்படுத்தப்படும் இவ்வகை ஹெலிகாப்டர்கள் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்படும் விமானப்படை தளத்தின் பின்பகுதியில் தைலம் மரங்கள் வளர்ந்திருக்கும் அடர்ந்த காட்டுப்பகுதி உள்ளது.
 நேற்று பின்னிரவு இந்த காட்டுப் பகுதி வழியாக உள்ளே ஊடுருவிய தீவிரவாதிகள் இன்று அதிகாலை இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்.
உள்ளே நுழைந்து சுட்டுக் கொல்லப்பட்ட நான்கு தீவிரவாதிகள் தவிர, மேலும் சில தீவிரவாதிகள் அருகாமையில் இருக்கும் காட்டுப் பகுதிக்குள் பதுங்கி இருக்கக்கூடும் என பாதுகாப்பு படையினர் சந்தேகிக்கின்றனர்.
இதையடுத்து, அந்த காட்டுப் பகுதிகளுக்கு மேலே எம்.ஐ.ஜி.-21 மற்றும் எம்.ஐ.-25 ரக ஹெலிகாப்டர்களில் பறந்தவாறு பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
2ம் இணைப்பு
பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப் படை தளத்துக்குள் இராணுவ சீருடையுடன் நுழைந்து பயங்கரவாதிகள் இன்று அதிகாலை தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இம்மோதலில் 2 விமானப் படை வீரர்களும் உயிரிழந்தனர். பாகிஸ்தான் எல்லையில் உள்ள பஞ்சாப் மாநிலம் பதன் கோட் விமானப் படை தளத்துக்குள் இராணுவ சீருடையுடன் தீவிரவாதிகள் இன்று அதிகாலை 3.30 மணியளவில் உள்ளே நுழைந்தனர். அவர்கள் திடீரென ஏ.கே. 47 ரக துப்பாக்கிகள் மூலம் கண்மூடித்தனமாக சுடத் தொடங்கினர்.
இதனைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் பதிலடி கொடுத்தனர். இந்த பதிலடி நடவடிக்கைக்கு ஆளில்லா வேவு விமானங்கள், விமானப் படை ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப்பட்டன.
இன்று அதிகாலை 3.30 மணி முதல் காலை 9 மணிவரை இருதரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நீடித்தது. இம்மோதலில் ஊடுருவிய 4 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். விமானப் படை அதிகாரிகள் 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 6 பாதுகாப்புப் படையினர் படுகாயமடைந்தனர்.
பயங்கரவாதிகளின் தாக்குதலில் விமானப் படை தளத்துக்கு எந்த ஒரு சேதமும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் விமானப் படை தளத்தை இலக்கு வைத்து தீவிரவாதிகள் நடத்திய பெரிய முதலாவது தாக்குதலாக இது கருதப்படுகிறது.
முன்னதாக பாகிஸ்தானில் இருந்து பதன்கோட் மாவட்டத்துக்குள் ஊருவிய இந்த தீவிரவாதிகள் இகாகார் சிங் என்பவரை சுட்டுக் கொலை செய்திருந்தனர். பின்னர் குருதாஸ்பூர் போலீஸ் எஸ்.பி. சல்வீந்தர்சிங்கின் அலுவலக வாகனத்தை துப்பாக்கி முனையில் கடத்தி அதன் மூலமாக விமானப் படை தளத்துக்குள் ஊடுருவியிருந்தது தெரியவந்தது.
இந்த வாகனம், பஞ்சாப்- ஹிமாச்சல பிரதேச எல்லையில் அதாவது விமானப் படை தளத்தில் இருந்து 2 கி.மீ. தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அண்மையில்தான் பாகிஸ்தானுக்கு திடீரென நல்லெண்ண பயணமாக பிரதமர் மோடி சென்றிருந்தார்.
ஆனால் பிரதமர் மோடியின் பயணத்தை விரும்பாத அந்நாட்டு உளவு அமைப்பு, இராணுவத்தினர், இருதரப்பு உறவை சீர்குலைக்கும் வகையில் இத்தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலை நடத்தியது ஜெய்ஷியே முகமது என்ற தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.
இச் சம்பவத்தைத் தொடர்ந்து அனைத்து இராணுவ நிலைகளும் மிகவும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. டெல்லியில் இந்த தாக்குதல் தொடர்பாக அவசர ஆலோசனை நடைபெற்றது.
இதுபோன்ற தாக்குதல் நடத்தப்படக் கூடும் என்று உளவுத்துறை முன்னெச்சரிக்கை விடுத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே பதன்கோட் தாக்குதல் சம்பவம் குறித்து பிரதமர் மோடியை நேரில் சந்தித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் விளக்கம் அளித்துள்ளார்.