புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

1 பிப்., 2016

10 நாட்களில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையாவர்!- அற்புதம்மாள் நம்பிக்கை

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை இன்னும் 10 நாட்களில் ஜெயலலிதா விடுதலை செய்வார் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கூறியுள்ளார்.
ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தப்பே செய்தவர்களாக இருந்தால் கூட 20 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கக் கூடாது என்று சிறை விதிகள் இருக்கிறது. தப்பே செய்யாத என் பையன் 25 ஆண்டுகளாக உள்ளே இருக்கிறான்.
ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட பின்னர் பேரறிவாளன் உள்ளிட்டோரின் விடுதலைக்கு முந்தைய காங்கிரஸ் ஆட்சி முட்டுக்கட்டை போட்டது. ஆனால் அடுத்து வந்த பாஜக அரசில் எங்களுக்கு ஒரு நல்லது நடக்கும் என்று எதிர்பார்த்தோம்.
இத்தனை ஆண்டுகள் சிறையில் இருந்தார்கள் என்பதை கவனத்தில் எடுத்து மோடி அரசு விடுதலை செய்யும் என்று நம்பினோம். ஆனால் இன்றுவரை அது நடக்கவில்லை.
பொங்கல் அல்லது குடியரசு தின விழாவில் பேரறிவாளன் உள்ளிட்டவர்கள் விடுதலையாவர்கள் என்று எதிர்பார்த்தோம். அது நடக்கவில்லை.
தேர்தல் வருவதையொட்டி பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை இன்னும் 10 நாட்களில் ஜெயலலிதா விடுதலை செய்வார் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக கூறினார்.