புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

1 பிப்., 2016

ரஷ்யா கடும் விளைவுகளை சந்திக்கும்: துருக்கி எச்சரிக்கை

துருக்கி வான்பகுதியில் ரஷ்ய விமானம் மீண்டும் அத்துமீறி நுழைந்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள துருக்கி அரசு, இதுபோன்ற சம்பவங்கள்
மீண்டும் அரங்கேறும் பட்சத்தில், ரஷ்யா கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று துருக்கி எச்சரித்துள்ளது.
ரஷ்ய நாட்டின் போர் விமானம் ஒன்று, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தங்களது வான் எல்லையில் அத்து மீறி பறந்ததாக கூறி, அதை துருக்கி போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தின.
இந்த சம்பவத்தால் ரஷ்யா-துருக்கி இடையே மோதல் நிலை உருவாகி உள்ளது. இந்நிலையில், ரஷ்யாவின் எஸ்யு-34 ரக விமானம் ஒன்று, நேற்று தங்களது வான் எல்லையில் அத்துமீறி பறந்ததாக துருக்கி குற்றம் சாட்டி உள்ளது.
ஆனால் இதை ரஷ்யா திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இது தொடர்பாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் இகோர் கொனா-ஷெங்கெவ் கூறியதாவது, எந்தவொரு ரஷ்ய விமானமும், துருக்கி எல்லையில் நுழைந்து பறக்கவில்லை.
ஆங்கிலத்திலோ, ரஷ்ய மொழியிலோ எந்தவொரு எச்சரிக்கையையும் துருக்கி நாட்டால் விடுக்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.