புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஜன., 2016

முன்னாள் சட்டமா அதிபர் சிவா பசுபதி யாழில்! அரசியல் தீர்வு வரைவு தயாரிக்கும் குழுவில் இணைவு!

இலங்கையின் 34வது சட்டமா அதிபராக பதவி வகித்த சிவா பசுபதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் பலதரப்பட்ட தரப்பினருடனும் சந்திப்புக்களை மேற்கொள்வாரென எதிர்பார்க் கப்படுகின்றது.
தமிழ் மக்கள் பேரவையினால் அரசியல் தீர்வு சம்பந்தமாக வரைவைத் தயாரிப்பதற்காக 15பேர் கொண்ட உபகுழுவொன்று உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த உபகுழுவுக்கான கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்கள் சார்ந்த தலா இரண்டு பிரதிநிதிகளின் தெரிவு இடம்பெற்று வரும் நிலையில் முன்னாள் சட்ட மா அதிபர் சிவா பசுபதியும் அக்குழுவில் இணைத்துக் கொள்ளப்படுவாரென தகவல்கள் வெளியாகியிருந்தன.
இவ்விடயம் தொடர்பான முழுமையான தீர்மானங்கள் இதுவரையில் எட்டப்பட்டிருக்காத நிலையில் சிவா பசுபதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தற்போது 82 வயதாகும் சிவா பசுபதி இலங்கையின் 34வது சட்ட மா அதிபராக 13 வருட காலம் (1975 – 1988) பணியாற்றியுள்ளார். இவர் ஒரு ஜனாதிபதி சட்டத்தரணியுமாவர்.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மற்றும் கொழும்பு ஆனந்தா கல்லூரி ஆகியவற்றில் தனது பாடசாலை கல்வியைப் பயின்ற சிவா பசுபதி, கொழும்பு பல்கலைக்கழகத்தில் தனது சட்ட பட்டப்படிப்பை பூர்த்தி செய்ததன் பின்னர் இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலும் பட்ட பின்படிப்பை பூர்த்தி செய்திருந்தார்.
தற்போயை பிரதமர் ரணில் விக்ரமசிங்க 2002ம் ஆண்டில் பிரதமராக பதவி வகித்த தருணத்தில் அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுகும் இடையில் ஒஸ்லோ பேச்சுவார்த்தை நடைபெற்ற போது தமிழீழ விடுதலைப் புலிகளின் பேச்சுவார்த்தை குழுவின் ஆலோசகராக பணியாற்றியிருந்தார்.
அவ்வமைப்பின் அரசியல் விவகார குழுவின் பிரதிநிதியாகவும் பணியாற்றியிருந்தார். விடுதலைப் புலிகள் இடைக்கால தீர்வாக முன்வைத்த இடைக்கால தன்னாட்சி அதிகார சபையை இந்த அரசியல் விவகார குழுவே தயாரித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ad

ad