புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஜன., 2016

ஜல்லிக்கட்டு தொடர்பாக பேச திமுக, காங்கிரசுக்கு எந்த அருகதையும் கிடையாது: ஓ.பன்னீர்செல்வம்

ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக  நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் ஆளுநர் உரை மீதான விவாதம் தொடங்கியுள்ளது.
அப்போது, திமுக பேரவைக்குழு தலைவர் மு.க.ஸ்டா லின், ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பாக பேச அனுமதி கேட்ட போது பேரவைத் தலைவர் அனு மதி மறுத்ததுள்ளார். இதையடுத்து, திமுக வினர் வெளிநடப்பு செய்துள்ளனர்.
அதைத் தொடர்ந்து உறுப்பினர்கள் அ.சவுந்திரராஜன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), குணசேகரன் (இந்திய கம்யூனிஸ்ட்), ஜவா ஹிருல்லா (மமக) ஆகியோர், ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது தொடர்பாக சட்டப்பேரவையில் சிறப்புத் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
சட்டப்பேரவையில் சிறப்புச் சட்டம் கொண்டுவருவது தொடர் பாக தொடர்ந்து பேச அனுமதி அளிக்காததால் கம்யூனிஸ்ட் உறுப்பினர்களும் காங்கிரஸ் உறுப்பினர் விஜயதாரணியும் வெளிநடப்பு செய்துள்ளனர்.
பின்னர்  நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், ஜல்லிக்கட்டு தொடர்பாக பேச திமுக, காங்கிரசுக்கு எந்த அருகதையும் கிடையாது.
மத்தியில் காங்கிரஸ் அரசு இருந்தபோதுதான் காட்சி விலங்குகள் பட்டியலில் காளையையும் சேர்க்கப்பட்டது.
ஜல்லிக்கட்டு போட்டியை நடத்து வதற்கான சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை முதல்வர் எடுத்து வருவது அனைவரும் அறிந்ததுதான்.
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால், இதுதொடர் பாக இங்கே பேசுவது பூதாகரமாகி விடும். ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார்.

ad

ad