புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 பிப்., 2016

இந்தியச் செய்தி ஐய்யப்பன் கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க முடியாது: கேரள அரசு

பரி மலை ஐய்யப்பன் கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
கடந்த 2006ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் இந்திய இளம் வழக்கறிஞர்கள் அமைப்பு மற்றும் ஐந்து பெண் வழக்கறிஞர்கள் சபரி மலை ஐய்யப்பன் கோவிலுக்குள் சென்று வழிபட பெண்களை அனுமதிக்க கோரி மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை கடந்த மாதம் 11ம் திகதி விசாரித்த நீதிபதிகள், 1500 ஆண்டுகளாக பெண்கள் கோவிலுக்குள் செல்லவில்லை என்பதற்கான ஆதாரம் ஏதும் உண்டா? எதற்காக தடுக்கிறீர்கள் என கோவில் நிர்வாகத்திற்கு கேள்வி எழுப்பினர்.
அத்துடன் ஒருவாரத்திற்குள் இதுதொடர்பாக கேரள அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், வழக்கமாக கடைபிடிக்கப்பட்டு வரும் மரபுகளை மாற்ற முடியாது. எனவே, சபரி மலை அய்யப்பன் கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க முடியாது எனக் கூறப்பட்டுள்ளது.

ad

ad