புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 மார்., 2016

7 தமிழரை விடுதலை செய்யக் கோரும் தமிழக அரசின் 
முடிவை ஏற்று மத்திய அரசே ஒப்புதல் தருக: வேல்முருகன்
 
தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
’’ராஜிவ் வழக்கில் கால் நூற்றாண்டுகாலமாக சிறையில்வாடுகிற 7 தமிழரை விடுதலை செய்ய முதல்வரின் தொடர்ச்சியாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதன் மற்றொரு வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கையாக 7 தமிழரை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்துவிட்டது; இதற்கு மத்திய அரசு ஒப்புதல் தர வேண்டும் என்று கடிதம் அனுப்பியுள்ளதை உலகத் தமிழினம் பெருமகிழ்ச்சியுடன் வரவேற்கிறது.
 
25 ஆண்டுகாலமாக சிறையில்வாடுகிற 7 தமிழரை விடுதலை செய்ய தமிழக அரசு மேற்கொண்ட முந்தைய நடவடிக்கைகளை மத்தியில் ஆண்ட காங்கிரஸும், மத்தியில் ஆளும் பாரதிய ஜனதாவும் முட்டுக்கட்டை போட்டு உச்சநீதிமன்றத்துக்குப் போயின. ஆனாலும் உச்சநீதிமன்றமோ கடந்த டிசம்பர் மாதம் 2-ந் தேதி அளித்த தீர்ப்பில், அரசியல் சாசனத்தின் 161-வது பிரிவின் கீழ் தமிழக அரசே, 7 தமிழரையும் விடுதலை செய்ய முடியும்; இதில் நீதிமன்றம் தலையிடாது என்று உறுதியான தீர்ப்பை அளித்துள்ளது.
 
இதனை நடைமுறைப்படுத்தும் வகையில் முதல் கட்ட நடவடிக்கையாக 7 தமிழரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது என்றும் இந்திய குற்றவியல் சட்டம் 435-வது பிரிவின் கீழ் மத்திய அரசின் கருத்தை கோருவதாகவும் தமிழக அரசு, கடிதம் அனுப்பியுள்ளது. அப்பாவி 7 தமிழரை விடுதலை செய்ய வேண்டும் என்ற உலகத் தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தமிழக முதல்வர் மேற்கொண்டுள்ள இந்த மாந்தநேயமிக்க நடவடிக்கையை தமிழக வாழ்வுரிமைக் கட்சி பெருமகிழ்ச்சியுடன் வரவேற்கிறது.
 
தமிழகத்தின் தமிழரின் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படுத்துவதே தமது இலக்காக கொண்டு செயல்படும் தமிழக முதல்வரின் இந்த மனிதநேயமிக்க நடவடிக்கையை உலகத் தமிழர்கள் பெருமகிழ்ச்சியோடு வரவேற்கிறோம்.
 
தமிழக அரசின் கோரிக்கை என்பது ஒரு அரசின் கோரிக்கை அல்ல; ஒட்டுமொத்தமாக உலகெங்கும் வாழும் தமிழர்களின் பெருவிருப்பம்; இதுதான் தமிழக அரசின் கோரிக்கையாக மத்திய அரசு முன்நிற்கிறது.
 
ஆகையால் இந்திய மத்திய பேரரசு, இதுகாறும் தமிழினத்தை வஞ்சித்து வருவதைப் போலன்றி உலகத் தமிழினத்தின் ஒட்டுமொத்த உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் தமிழக முதல்வர் அரசு முன்வைத்துள்ள இந்த கோரிக்கையை ஏற்று 7 தமிழர் விடுதலைக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.
 
இப்போதும் 7 தமிழர் விடுதலைக்கு முட்டுக்கட்டையாக இந்தியப் பேரரசு தமது ஆதிக்க மனோபாவாத்தை வெளிப்படுத்துமேயானால் இனியும் தயங்காது அரசியல் சாசனத்தின் 161-வது பிரிவின் கீழ் தமிழ்நாடு அரசுக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி 7 தமிழரை விடுதலை செய்யும் அறிவிப்பை   வெளியிட வேண்டும் என்றும் உலகத் தமிழர்கள் சார்பாக வேண்டுகோள் விடுக்கிறோம்.
 
எண்ணற்ற புரட்சிகரமாக திட்டங்களை நிறைவேற்றி தமிழரது வாழ்வில் ஒளியேற்றி வைத்திருக்கும் தமிழக முதல்வர்  7 தமிழர் விடுதலையையும் வென்றெடுப்பார் என்று உலகத் தமிழினம் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.’’

ad

ad