புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 மார்., 2016

மொழியாற்றல் அற்றவரா மஹிந்த? சர்வதேசத்தை ஏமாற்றியமை அம்பலம்

ஹிந்த ராஜபக்ச நாட்டை ஆட்சி செய்த சந்தர்ப்பத்தில் எழுதி வைத்த எதனையும் பார்க்காமல் சிங்களத்தில் உரையாற்றுவதற்கும், தெரியாத தமிழ்
மற்றும் ஆங்கில மொழிகளில் உரையாற்றுவதற்கும் கருவி ஒன்றை பயன்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்காக மக்கள் பணம் இரண்டரை கோடி ரூபா செலவிட்டுள்ளதாக தற்போதைய ஜனாதிபதி செயலக அதிகாரிகளினால் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.mahinda_telePromter_001
மஹிந்த ராஜபக்ச மும்மொழியிலும் சரளமாக பேசுவார் என வெளிப்படுத்துவதற்காக teleprompter என்ற கருவியை பயன்படுத்தியுள்ளதோடு அந்த கருவிக்காக 24 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலக கணக்குகளில் தெரியவந்துள்ளது.
தற்போதைய ஜனாதிபதிக்கு உரையாற்றுவதில் எந்த சிக்கலும் இல்லாமையினால் teleprompter எதற்கு என்பதனை ஆராய்ந்து பார்க்கும் போதே இந்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
கிட்டத்தட்ட 24 மில்லியன் ரூபாவை செலவிட்டு teleprompter கருவியை ஊடக அமைச்சு, தகவல் திணைக்களம், திரைப்படக் கூட்டுத்தாபனம் அல்லது இது தொடர்பிலான வேறு அரசாங்க நிறுவனங்களின் ஊடாக கொண்டு வரப்படவில்லை எனவும், யாருக்கு கொண்டு வரப்பட்டுள்ளதென்பது தொடர்பிலும் குறிப்பிடப்படவில்லை. எனினும் செலவிடப்பட்டுள்ளமை மாத்திரம் குறிப்பிடப்பட்டுள்ளது.
teleprompter  ஒன்றின் பெறுமதி 24 மில்லியன் ரூபா இல்லை எனவும் அதில் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
மஹிந்த ராஜபக்ச தனக்கு தெரியாத தமிழ் மொழியை எந்தவொரு பேப்பரிலும் எழுதி வைக்காமல் உரையாற்றுவதனை போன்று மக்களுக்கு காட்டி கொண்டு சிங்களத்தில் உச்சரிப்புகளை எழுதி வைத்து பெரிய எழுத்துக்களில் teleprompter கருவியை பார்த்து கொண்டு தான் உரையாற்றியுள்ளார். இதன் காரணமாக மஹிந்த தமிழில் உரையாற்றியதனை பார்த்து தமிழ் மக்கள் சிரிக்கவில்லை என தெரியவந்துள்ளது.
தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுகொள்வதற்காக அவ்வாறு கடினமாக தமிழ் பேசிய மஹிந்த ராஜபக்ச, தமிழ் தேசிய கீதம் பாடப்பட்டமைக்கு கடுமையான எதிர்ப்பு வெளியிட்ட ஒருவராகும்.
எப்படியிருப்பினும் இந்த teleprompter என்ற இரண்டு கருவியை பயன்படுத்தியுள்ளதோடு, மஹிந்த ராஜபக்ச உரையாற்றும் போது இரண்டு பக்கங்களும் உள்ள மக்களை பார்ப்பது போல் கேமராக்களுக்கு தெரிந்தாலும் அவர் இரண்டு பக்கமும் பொருத்தப்பட்டுள்ள கருவிகளை பார்ப்பது யாருக்கும் தெரியாத வகையில் பொருத்தப்பட்டுள்ளது.
அந்த கருவிகளின் திரை பார்ப்பவர்களுக்கு தெரியாத வகையில் பூக்களினால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. ஒருமுறை இவ்வாறு மறைத்து வைக்கப்பட்டிருந்த கருவி கேமராக்களில் பிடிக்கப்பட்ட புகைப்படம் ஒன்றில் சிக்கியதோடு அந்த புகைப்படம் லேக்ஹவுஸ் ஊடகத்தில் பிரசுரிக்கப்பட்டதன் காரணமாக மஹிந்த பொய் வெளியாகியது.
இன்று ஊடக சுதந்திரம் குறித்து பேசும் மஹிந்த, அன்று அந்த புகைப்படத்தை பிரசுரித்த ஊடகவியலாளரை பதவியில் இருந்து நீக்கிவிட்டார்.
வார்த்தைகள் தடுமாறாமல் சிங்களத்தில் உரையாற்றுவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாகவே மஹிந்த ராஜபக்ச ஆரம்பத்தில் இந்த teleprompter கருவியை கொண்டு வந்துள்ளார்.
அரச தலைவர்கள் சர்வதேச ரீதியில் முக்கிய விடயங்களை உரையாற்றும் போது teleprompter பயன்படுத்தியுள்ளனர். எனினும் ராஜபக்சவுக்கு ஒவ்வொரு முறையும் உரையாற்றும் போது teleprompter  இன்றி உரையாற்ற இயலவில்லை.
ஒன்றையும் பார்க்காமல் உரையாற்றுவதனை போன்று மக்களுக்கு காட்டிவிட்டு அவர் இவ்வாறான நடவடிக்கை ஒன்றினையே மேற்கொண்டுள்ளார்.
புத்தகம் ஒன்றினையும் வாசித்து பழக்கம் இல்லாமையினாலே அவரால் சிங்கள மொழியை சரளமாக பேச முடியவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

ad

ad