புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 மார்., 2016

மைத்திரி - மகிந்த இணைய சாத்தியமில்லை!

மைத்திரி- மகிந்த ஒருபோதும் இணையப்போவதில்லை. இருவரதும் கொள்கைகளுக்கிடையில் பாரிய வித்தியாசம் நிலவுகின்றது என நவ சமசமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்தார்.

அதிகாரத்தைப் பகிர்ந்து ஐக்கியப்படுத்தும் இயக்கம் இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
பயங்கரவாத தடைச்சட்டத்தில் இருந்து அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுத்துவருகின்றோம் .

குண்டுவைத்தோ துப்பாக்கி முனையிலோ குறிப்பிட்ட சில மக்களின் கொள்கை, நம்பிக்கை அல்லது அவர்கள் சுயமாக எடுக்கும் தீர்மானங்களை மாற்ற முடியாது என ஜனாதிபதி தெரிவித்திருக்கின்றார். 

இது ஜனாதிபதியின் தனிப்பட்ட கொள்கையாகும். மாறாக சுதந்திரக்கட்சியின் கொள்கை அவ்வாறு இருக்கவில்லை. அதனால்தான் போர் முடிவடைந்து பல வருடங்கள் கடந்தும் இனங்களுக்கு மத்தியில் நல்லிணக்கம் ஏற்படவில்லை. இன நல்லிணக்கம் மூலமே ஒற்றுமையை ஏற்படுத்த முடியும் என்ற நிலைப்பாட்டில் ஜனாதிபதி செயற்பட்டுவருவது வரவேற்கத்தக்கது.

அதேபோன்று 2002ஆம் ஆண்டு ரணில் விக்ரமசிங்க பிரபாகரனுடன் ஒப்பந்தம் செய்துகொண்டபோது அதனை சிலர் எதிர்த்தனர்.  ஒப்பந்தம் தான் சரியான நடவடிக்கை என்று நாங்கள் கூறிவந்தோம். ஆனால் மகிந்த ராஜபக்ச, விமல் வீரவன்ச போன்றவர்கள் இதற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்து, மக்களிடம் பொய் கூறிவந்தனர். இல்லாவிட்டால் போர் இன்றி அதிகாரப்பகிர்வின் மூலம் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தியிருக்க முடியும்.

அத்துடன் 2005ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மஹிந்த வென்றாலும் ரணில் வென்றாலும் ஒன்றும் ஏற்படப்போவதில்லையென பிரபாகரன் கூறிய பொய்யின் விளைவால் அந்த மக்களின் பாதிப்பேர் அழிந்து விட்டனர். 

அந்த தேர்தலில் ரணில் விக்ரமசிங்க 29ஆயிரம் வாக்குகளால் தான் தோல்வியுற்றார். இது ஓர் வரலாற்று தவறு என்பதை தற்போது தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்கின்றனர்.

மேலும் இன நல்லிணக்கம் மூலமே மக்கள் மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்த முடியும் என ஜனாதிபதி கூறிவருவதுடன் அதற்கான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறார். 

இவ்வாறான நிலையில் மகிந்த ராஜபக்சவையையும் மைத்திரிபால சிறிசேனவையையும் இணைப்பதற்கு ஒருசிலர் முயற்சி செய்து வருகின்றனர். 

ஆனால் இவர்கள் இருவரதும் கொள்கை பாரியளவில் வித்தியாசமாகும். அவ்வாறு இருக்கும் போது இவர்களை ஒன்றிணைப்பது ஒருபோது இடம்பெறாத விடயமாகும்.

அத்துடன் மகிந்த ராஜபக்ச தற்போது அவருடைய காலத்தில் இடம்பெற்ற தவறுகளை ஏற்றுக்கொள்கிறார். ஆனால் அந்த தவறுகளுக்கு தான் மட்டும் பொறுப்பில்லையென தெரிவித்து வருகிறார். அவருடைய இந்த குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் மேலும் தெரிவித்தார்.

ad

ad