புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

9 ஏப்., 2016

10ம் தேதி ஆலோசனைக் கூட்டம்: தேமுதிகவில் இருந்து நீக்கப்பட்ட 10 பேர் கூட்டறிக்கை


தேமுதிகவில் இருந்து நீக்கப்பட்ட சந்திரகுமார் உள்ளிட்ட 10 பேர் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அதில், 2016 சட்டமன்ற தேர்தலில் தேமுதிக வலுவான கூட்டணியை அமைக்க வேண்டும் என்று கட்சியின் 95 சதவிகிதம் நிர்வாகிகள், தொண்டர்களின் வேண்டுகோளை தலைவர் கேப்டன் இடத்தில் நாங்கள் எடுத்து கூறியதாலும், கடிதம் மற்றும் ஊடகங்கள் மூலமாகவும் கூறியதால் நாங்கள் 10 பேரும் கட்சியின் அடிப்படை உறுப்பினரில் இருந்து நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. 

இதை அறிந்த தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் எங்கள் கருத்துக்களை செல்போன், இமெயில், வாட்ஸ்அப் மூலம் ஆதரவு தெரிவித்துள்ளனர். 

ஆதரவு தெரிவித்துள்ள தொண்டர்கள், நிர்வாகிகள் வேண்டுகோளை ஏற்று கலந்தாலோசனை கூட்டம் வருகிற 10.04.2016 ஞாயிறு காலை 10 மணி அளவில் சென்னை தி.நகர் பாண்டிபஜாரில் உள்ள இ.வி.பி. ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. 

இந்த கலந்தாலோசனை கூட்டத்தில் தேமுதிகவின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழக செயலாளர்கள் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது. 

ஞாயிறு மாலை தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி தேர்தல் பிரச்சார மாநாடு மாமண்டூரில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.