புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 மே, 2016

98 வீதமான முன்னாள் போராளிகள் சமூகத்துடன் இணைப்பு! புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம்

விடுதலைப்புலிகளுடன் இணைந்து போரில் ஈடுபட்ட 98 வீதமானவர்களுக்குப் புனர்வாழ்வு வழங்கப்பட்டு, அவர்கள் சமூகத்துடன்
இணைக்கப்பட்டுள்ளனர். பொருளாதார ரீதியாக உயரக் கூடிய வகையில் பல பயிற்சிகளும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஜானக ரத்னாயக்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
"இன்னும் சில வருடங்களில் புனர்வாழ்வு அளிக்கும் பணிகள் நிறைவடைந்துவிடும். கடந்த காலங்களில் விடுதலைப்புலிகளுடன் இணைந்து போரில் ஈடுபட்ட 98 சதவீத மானவர்களுக்குப் புனர்வாழ்வு வழங்கப்பட்டு அவர் கள் சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர்.
எமது நாட்டில் கடந்த 30 வருட காலமாகப் போர் இடம்பெற்றது. அதனால் நாம் இன்று பொருளாதார ரீதியாகப் பின் நிற்கின்றோம். போர் இடம்பெற்றிருக்காவிட்டால், எமது நாடு இன்று சிங்கப்பூர் போல் மாறியிருக்கும்.
போர் அழிவுகள் முள்ளிவாய்க்கால் வரை ஏற்பட்டது. இதற்கு காரணம் என்ன? அயல்நாடுகள் எமது நாட்டின் வளர்ச்சியைப் பொறுக்காது பிரச்சினைகளை வளர்த்துவிட்டார்கள். இதனால் நாங்கள்தான் பாதிக்கப்பட்டோம்.
அரபு நாடுகளில் வளம் இருந் தாலும் அவர்கள் நிம்மதியாக இருக்கமுடியவில்லை. ஐ.எஸ். போன்ற பல தீவிரவாத அமைப்புக்கள் இருக்கின்றன. ஆனால், எமது நாட்டில் அவ்வாறான நிலைமை இல்லை.
2009 மே மாதத்துக்குப் பின் இந்த நாட்டில் போர் முடிவடைந்து பல அபிவிருத்திகள் ஏற்பட்டு வருகின்றன. புனர்வாழ்வு பெற்றவர்களுக்கும் பொருளாதார ரீதியாக உயரக்கூடிய வகையில் பல பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. எனவே, அனைவரும் ஒற்றுமையாக இணைந்து செயற்பட்டு பொருளாதார ரீதியாக எமது நாட்டைக் கட்டியயழுப்ப வேண்டும் என தெரிவித்துள்ளார்.

ad

ad