புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 மே, 2016

ஹிரோஷிமாவில் அமெரிக்க அதிபர் ஒபாமா அஞ்சலி: அணு ஆயுதமில்லா உலகை உருவாக்க அழைப்பு

1945ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா நகரைம் மீது அமெரிக்கா அணுகுண்டு வீசியது. உலகின் முதல் அணுகுண்டு தாக்குதலான இதில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். பல லட்சம பேர் பாதிக்கப்பட்டனர். அடுத்த மூன்று நாட்கள் இடைவெளியில் ஜப்பானின் நாகசாகி நகரிலும் அமெரிக்கா மற்றொரு அணுகுண்டை போட்டது. இதில் 74 ஆயிரம் பேர் பலியாகினர்.  

இந்த இரண்டு அணுகுண்டு வீச்சுகளும்தான் இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வருவதற்கு அடிப்படை காரணமாக அமைந்தன. ஹிரோஷிமாவில் இப்படி முதன்முதலாக அணுகுண்டு வீசி, ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேரை கொன்று குவித்த அமெரிக்காவின் ஜனாதிபதி யாரும் அந்த நகருக்கு தமது பதவிக்காலத்தில் சென்றதே இல்லை. ஜிம்மி கார்ட்டர் அங்கு சென்றுள்ளார். ஆனால் அவரும் தனது பதவிக்காலம் முடிந்த பின்னர்தான் சென்றிருக்கிறார். அணுகுண்டு வீச்சின் பாதிப்பு 70 ஆண்டுகளுக்கு பிறகும் தொடரும் நிலையில்தான் ஜப்பானில் உள்ள ஷிமா நகரில் ஜி-7அமைப்பு நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்க சென்றிருந்த அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, ஹிரோஷிமா சென்றார்.

ஜப்பான் பிரதமர் சின்சோ அபேவுடன் ஹிரோஷிமா நினைவிடத்துக்குச் சென்ற ஒபாமா அங்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். 

பின்னர் பேசிய அவர், இந்த நினைவிடம் போர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் பணியை நாம் முடிக்கவில்லை, அமைதியை நிலைநாட்டும் பணியை நாம் இன்னும் நிறைவு செய்யவில்லை, இனி எதிர்காலத்தில் அணு ஆயுதப் போரே இல்லை என்ற நிலையையும் இன்னும் நாம் எட்டவில்லை என்பதையே நினைவுபடுத்துகிறது. ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசப்பட்ட சம்பவம் நவீன வரலாற்றின் மாற்றுப் புள்ளி. அந்த நிகழ்வை நாம் ஏதோ ஒரு விதத்தில் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

நாசவேலையில் ஈடுபடும் மனிதனின் திறனை நாம் அழிக்க முடியாமல் போகலாம். எனவே உலக நாடுகள் நம்மை காத்துக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஆனால் எனது சொந்த நாடான அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் இன்றும் அணு ஆயுதங்களை வைத்துள்ளோம். அச்சத்தின் காரணமாக அவற்றை வைத்துக்கொள்ளும் மன நிலையில் இருந்து வெளி வந்து அணு ஆயுதமில்லா உலகை உருவாக்க வேண்டும். எனது வாழ்நாளில் அது நிறைவேறாமல் போகலாம். ஆனால் உறுதியான நடவடிக்கைகள் எடுத்தால் வருங்காலத்தில் அது சாத்தியமாகும் என்றார்.

அணுகுண்டு தாக்குதலில் உயிர் பிழைத்த சிலரையும் ஒபாமா சந்தித்தார். ஹிரோஷிமாவில் தாக்குதலில் தப்பிப் பிழிஅத்த கின்யூ இகேகமி கூறும்போது, "அந்த நாள் ஏற்படுத்திய தாக்கம் இன்னும் என்னைவிட்டு நீங்கவில்லை. பள்ளிக் குழந்தைகள் உதவி, உதவி எனக் கதறிய சத்தம் இன்னமும் என் நெஞ்சத்தை பதற வைக்கிறது. ஹிரோஷிமா அணுகுண்டு கதிர்வீச்சு தாக்கம் தலைமுறைகள் தாண்டி இன்னும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. எங்களது வேதனைகளை ஒபாமா உணர்ந்து கொள்ள வேண்டும் என விரும்புகிறேன்" என்றார்.

இது ஒருபுறம் இருக்க அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை நிர்ணயிக்கும் அளவுக்கு ஜப்பானியர்களின் வாக்கு வங்கி கணிசமான பங்கு வகிப்பதால், ஒபாமா ஹிரோஷிமா சென்றுள்ளதாக சில விமர்சனங்களும் எழுந்துள்ளன

ad

ad