புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 மே, 2016

எம்.எல்.ஏ. சீட்டில் தோற்ற வைத்திக்கு எம்.பி. சீட்


நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஒரத்தநாடு தொகுதியில் போட்டிட்டு தோற்றார் முன்னாள் அதிமுக அமைச்சரான வைத்திலிங்கம்.  அவருக்கு மாநிலங்களவை சீட் தந்துள்ளார் ஜெயலிதா. 

டெல்லி மேல்–சபையில் தமிழக எம்.பி.க்களில் 6 பேர் பதவி காலம் முடிகிறது. நவநீதகிருஷ்ணன், மனோஜ் பாண்டியன், ரபி பெர்னாட் (அ.தி.மு.க.), கே.பி. ராமலிங்கம், எஸ்.தங்கவேலு (திமு.க.), சுதர்சன நாச்சி யப்பன் (காங்கிரஸ்) ஆகியோரது பதவி காலம் முடிகிறது.  இவர்களுக்கு பதிலாக புதிதாக 6 மேல்சபை எம்.பி.க்கள் தேர்ந்து எடுக்கப்படுகிறார்கள். தற்போதுள்ள நிலவரப்படி அ.தி.மு.க. 4 எம்.பி.க்களையும், தி.மு.க. 2 உறுப்பினர்களையும் தேர்வு செய்ய இயலும். இதனால் தமிழ்நாட்டில் இருந்து 6 மேல்சபை உறுப்பினர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்படலாம் என்று தெரிகிறது.

தி.மு.க. சார்பில் டி.கே.எஸ். இளங்கோவன், ஆர்.எஸ். பாரதி ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு விட்டனர். இந்நிலையில், அ.தி.மு.க. இன்று வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
 
அதிமுக பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா, மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை அறிவித்தார்.  வைத்திலிங்கம், நவநீதகிருஷ்ணன், எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம், எ.விஜயகுமார் ஆகிய 4 பேரும் வேட்பாளர்கள் என அறிவித்தார்.

ad

ad