புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 மே, 2016

அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தல் ஒத்திவைப்பு - தேர்தல் ஆணையம் அதிரடி


கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மே 16க்கு பதில் மே 23ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை மே 25ஆம் தேதி நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

பணப்பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு புகார்கள் வந்ததையடுத்து, தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பணப்பட்டுவாடா புகாரில் தேர்தல் ஒத்திவைக்கப்படுவது இதுவே முதல் முறை.

திமுக சார்பில் கே.சி.பழனிசாமியும், அதிமுக சார்பில் செந்தில் பாலாஜியும் போட்டியிடுகின்றனர். இந்த தொகுதியில் திமுக, அதிமுக இடையே கடும் போட்டி நிலவுகிறது. கரூர் அருகே கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிமுக பிரமுகர் அன்பு நாதன் என்பவர் வீட்டில் ரூபாய் 5 கோடி பணம் ரொக்கமாக கைப்பற்றப்பட்டது. இவர் செந்தில்பாலாஜிக்கு நெருக்கமானவர் என்ற புகாரும் எழுந்தது குறிப்பிடத்தக்கது. 

ad

ad