நாட்டில் ஏற்ப்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக பல குடும்பங்கள் தமது உறவுகள் மற்றும் உடமைகளை இழந்து தவிக்கின்ற
இச்சந்தர்ப்பத்தில் அவர்களை ஆறுதல் படுத்தும் முகமாக பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் வெல்லம்பிட்டி,கொடிகாவத்த பிரதேச பாடசாலையில் தங்கியுள்ள மக்களை பார்வையிட்டார்.

இச்சந்தர்ப்பத்தில் அவர்களை ஆறுதல் படுத்தும் முகமாக பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் வெல்லம்பிட்டி,கொடிகாவத்த பிரதேச பாடசாலையில் தங்கியுள்ள மக்களை பார்வையிட்டார்.
இன்று குறித்த பகுதிக்கு விஜயம் செய்த அவர், இயற்கையின் சீற்றத்தினால் நிர்க்கதியான நிலையில், இடம்பெயர்ந்து வெல்லம்பிட்டி, கொடிகாவத்த பாடசாலையில் தங்கியிருந்த மக்களின் குறைநிறைகளை கேட்டறிந்ததுடன், அவர்களுக்கு தமது சொந்த செலவில் கொண்டுவரப்பட்ட பெருந்தொகையான உலர் உணவுப்பொதிகள் மற்றும் அவசர முதலுதவிக்குத்தேவையான மருந்துப்பொருட்களையும் வழங்கிவைத்தார்.
எதிர்பாராத விதமாக மனித நேயத்துடன் தமக்கான உதவிகளை செய்த மஸ்தான் எம்பிக்கு அம்மக்கள் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.
இதேவேளை வெள்ளம், மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு மேலும் தன்னாலான உதவிகளை அவர் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.