புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 மே, 2016

சென்னையை சேர்ந்த ஆசிரியையை கவுரவித்த ஒபாமா!



அமெரிக்காவின் டெக்சாஸ் மாகனத்தைச் சேர்ந்த ஆசிரியை ரேவதி பாலகிருஷ்ணன் 2016 ஆம் ஆண்டிற்கான ‘சிறந்த ஆசிரியை’ விருதிற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். அவரைப் பாராட்டி வெள்ளை மாளிகையில் விருந்தளித்துக் கவுரவித்திருக்கிறார் அமெரிக்க அதிபர் ஒபாமா.



சென்னையைப் பூர்விமாகக் கொண்ட ரேவதி பாலகிருஷ்ணான் (வயது 53) கடந்த ஆறு ஆண்டுகளாக அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ‘பாட்சி சோமர்’ தொடக்கப்பள்ளியில், மூன்றாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு கணித ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். கல்வித்துறையில் இவர் ஆற்றிய சிறப்பான சேவைக்காக இவரை, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வெள்ளை மாளிகையில் நடந்த விழாவில் கவுரவித்து உள்ளார். மேலும், 2016 ஆம் ஆண்டிற்கான சிறந்த ஆசிரியைக்கான விருதிற்கும் இவர் பரிந்துரைக்கப்பட்டு உள்ளார்.
அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளிலும் தொடக்கப்பள்ளி ஆசிரியையாகப் பணியாற்றி வந்த ரேவதி தனது பள்ளிப்படிப்பை சென்னையில் முடித்தப் பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றார். ஆசிரியப் பணிக்கு முன்னதாகப் பனிரெண்டு வருட காலம் ‘லிபர்ட்டி மியூச்சுவல்’ நிறுவனத்தில் ‘சிஸ்டம் அனாலிஸ்ட்’ ஆகப் பணிபுரிந்தவர்.

தனக்குக் கிடைத்த அங்கீகாரம் குறித்து ரேவதி பாலகிருஷ்ணன் கூறுகையில், ''ஒரு இந்திய வம்சாவளிப் பெண்ணாக எனக்குக் கிடைத்த இந்த கவுரவம் ஒட்டுமொத்த இந்திய சமுதாயத்தையே பெருமைகொள்ளச் செய்திருக்கும் என நம்புகிறேன். நான் பணியாற்றும் பள்ளியில் அதிகமாக ஆசிய மாணவர்களே பயில்கின்றனர். அதிக இந்திய மாணவர்களை ஆசிரியப் பணியை ஏற்க வைத்ததற்காகப் பெருமிதம் கொள்கிறேன்.

ஆசிரியராக இருப்பது வெறும் பணியல்ல, அதுவோர் உயர்ந்த லட்சியப்பணி. அதை மிகுந்த விருப்பத்துடனே செய்து வருகிறேன்" என்று கூறும் ரேவதி பாலகிருஷ்ணன், அமெரிக்காவின் மற்ற மாகாணங்களில் உள்ள திறமை மிக்க ஆசிரியர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு சிறப்பான பயிற்சியளித்து மாநில, தேசிய அளவிலான பல திட்ட விவாதங்களுக்கு பங்கேற்கச் செய்கிறார் இந்த 'நாளைய தலைவர்களை' உருவாக்கும் நாயகி!

ad

ad