புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 ஜூன், 2016

மக்கள் நலக்கூட்டணி என்றால் நான்கு கட்சிகளின் கூட்டணிதான் : திருமாவளவன் பேட்டி

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் இன்று திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர்,  ‘’தமிழகத்தில் கூலிப்படை கலாச்சாரம் பெருகி வருகிறது.  கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் 14 கொலைகள்  நடைபெற்றுள்ளன.  

சட்டமன்றத்தில் ஆளுங்கட்சியாக இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் அவர்களுடைய விமர்சனங்களூக்கு பதில் சொல்லும் மன்றங்களாகவே பயன்படுத்துகின்றனர்.  மக்கள் பிரச்சனை குறித்து விவாதிக்க இடமளிப்பதில்லை.

உள்ளாட்சி மன்ற தேர்தலில் சென்னை மேயர் தொகுதியை தனித்தொகுதியாக அறிவிக்க வேண்டும்.  சென்னை வெள்ளத்தினால் அதிமுகவிற்கு உள்ளாட்சி மன்ற தேர்தலில் சரிவை ஏற்படுத்தும் என்பதை மனதில் வைத்து,   மேயர்கள் தேர்வை கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று  புதிய சட்ட மசோதாவை தாக்கல் செய்தது அதிமுக’’ என்று தெரிவித்தார்.

அவர் மேலும்,  ‘’தமாகா எங்கள் கூட்டணியில் இருந்து விலகி உள்ளாட்சி மன்ற தேர்தலை சந்திப்பதாக கூறியிருக்கிறது.  தேமுதிக அதன் நிலைப்பாட்டை இன்னும் அறிவிக்கவில்லை.  மக்கள் நலக்கூட்டணி என்றால் மதிமுக, விடுதலை சிறுத்தைகள், சிபிஐ, சிபிஎம் ஆகிய நான்கு கட்சிகள் இணைந்ததுதான்.  இந்த கூட்டணி உள்ளாட்சி தேர்தலிலும் தொடரும்’’ என்று தெரிவித்தார்.

ad

ad