புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஜூன், 2016

ஐரோப்பிய கால்பந்து திருவிழா இன்று தொடக்கம்

செயின்ட் டெனிஸ்,
24 அணிகள் பங்கேற்கும் ஐரோப்பிய (யூரோ) கோப்பை கால்பந்து திருவிழா பிரான்ஸ் நாட்டில் இன்று தொடங்குகிறது.
ஐரோப்பிய கோப்பை கால்பந்துகால்பந்தில் உலக கோப்பை போட்டிக்கு அடுத்தபடியாக அதிக ரசிகர்களை கவருவது ஐரோப்பிய (யூரோ) கோப்பை போட்டியாகும். ஐரோப்பிய கண்டத்தை சேர்ந்த நாடுகள் மட்டும் பங்கேற்கும் இந்த போட்டி 1960–ம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை
நடத்தப்பட்டு வருகிறது.
இதன்படி 15–வது ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டி பிரான்ஸ் நாட்டில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் ஜூலை 10–ந் தேதி வரை 31 நாட்கள் நடக்கிறது. அங்குள்ள 10 நகரங்களில் இந்த போட்டி அரங்கேறுகிறது. பிரான்ஸ் நாட்டில் ஐரோப்பிய கால்பந்து போட்டி நடைபெறுவது இது 3–வது முறையாகும். 1960, 1984–ம் ஆண்டுகளில் இங்கு போட்டி நடத்தப்பட்டு இருக்கிறது.
24 அணிகள் பங்கேற்புஇந்த போட்டியில் கடந்த முறை 16 அணிகள் பங்கேற்றன. இந்த தடவை அணிகள் எண்ணிக்கை 24 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அவை 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் போட்டியை நடத்தும் பிரான்ஸ், ருமேனியா, அல்பேனியா, சுவிட்சர்லாந்து அணிகளும், ‘பி’ பிரிவில் இங்கிலாந்து, ரஷியா, வேல்ஸ், சுலோவக்கியா அணிகளும், ‘சி’ பிரிவில் ஜெர்மனி, உக்ரைன், போலந்து, வடக்கு அயர்லாந்து அணிகளும், ‘டி’ பிரிவில் நடப்பு சாம்பியன் ஸ்பெயின், செக் குடியரசு, துருக்கி, குரோஷியா அணிகளும், ‘இ’ பிரிவில் பெல்ஜியம், இத்தாலி, அயர்லாந்து, சுவீடன் அணிகளும், ‘எப்’ பிரிவில் போர்ச்சுகல், ஐஸ்லாந்து, ஆஸ்திரியா, ஹங்கேரி அணிகளும் இடம் பிடித்துள்ளன.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை லீக் ஆட்டத்தில் மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் ‘ரவுண்ட்–16’ என்ற நாக்–அவுட் சுற்றுக்கு முன்னேறும். மேலும் 6 பிரிவுகளில் அதிக புள்ளியுடன் 3–வது இடத்தை பிடிக்கும் 4 அணிகளும் ‘ரவுண்ட்–16’ சுற்றுக்குள் நுழையும்.
தொடக்க ஆட்டத்தில் பிரான்ஸ்–ருமேனியாதொடக்க ஆட்டம் செயின்ட் டெனிஸ் நகரில் உள்ள ஸ்டாட் டி பிரான்ஸ் ஸ்டேடியத்தில் உள்ளூர் நேரப்படி இன்று (வெள்ளிக்கிழமை) இரவு தொடங்குகிறது. இதில் போட்டியை நடத்தும் பிரான்ஸ் அணி, ருமேனியாவை எதிர்கொள்கிறது. இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணி ஆரம்பமாகும் இந்த ஆட்டத்தை சோனி சிக்ஸ் டெலிவிஷன் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. இந்திய நேரப்படி நாளை மாலை 6.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் அல்பேனியா–சுவிட்சர்லாந்து அணியும், இரவு 9.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் வேல்ஸ்–சுலோவக்கியா அணியும் மோதுகின்றன.
22–ந் தேதி வரை லீக் சுற்று ஆட்டம் நடைபெறுகிறது. 25–ந் தேதி நாக்–அவுட் சுற்று தொடங்குகிறது. ஜூலை 6, 7–ந் தேதிகளில் அரை இறுதிப்போட்டியும், ஜூலை 10–ந் தேதி தொடக்க விழா நடைபெற்ற அதே மைதானத்தில் இறுதிப்போட்டியும் நடக்கிறது.
பிரான்ஸ் அணிக்கு வாய்ப்புஐரோப்பிய கால்பந்து ஜூரம் உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களை இப்போதே தொற்றி விட்டது. கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு உள்ள அணிகள் எவை? என்பது குறித்து கால்பந்து நிபுணர்கள் தங்களது கணிப்பை வெளியிட்டு வருகிறார்கள்.
கோப்பையை வெல்லும் ரேசில் போட்டியை நடத்தும் பிரான்ஸ் அணி முன்னிலையில் இருக்கிறது. பிரான்ஸ் அணியை பொறுத்தமட்டில் சொந்த மண்ணில் பெரிய போட்டிகளை நடத்தும் பொழுது மெச்சும் வகையிலேயே செயல்பட்டு இருக்கிறது. 1984–ம் ஆண்டு ஐரோப்பிய கோப்பையையும், 1998–ம் ஆண்டில் உலக கோப்பையையும் உள்ளூர் மண்ணில் வென்று அசத்திய அனுபவம் அந்த அணிக்கு இருக்கிறது. குறிப்பாக நடுகள வீரர் பால் போக்பாவை பிரான்ஸ் அணி அதிகம் நம்பி இருக்கிறது. அவர் இந்த போட்டி தொடரில் நட்சத்திர வீரராக ஜொலிப்பார் என்று நம்பப்படுகிறது.
உலக சாம்பியன் ஜெர்மனிநடப்பு உலக சாம்பியனான ஜெர்மனி அணியை குறைத்து மதிப்பிட முடியாது. அந்த அணி சமீபத்தில் குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெறாவிட்டாலும் அந்த அணியின் தாக்குதல் ஆட்டம் தரமாகவே விளங்கி வருகிறது. நாக்–அவுட் சுற்றுகளில் ஆடுகையில் ஜெர்மனி அணியினர் சூழ்நிலைக்கு தகுந்தபடி புத்திசாலித்தனமாக செயல்படக்கூடியவர்கள். இதுவரை 36 கோல்கள் அடித்து இருக்கும் தாமஸ் முல்லர், இந்த சீசனில் 16 ஆட்டங்களில் 8 கோல்களை பதிவு செய்து இருக்கும் மரியோ கோட்ஸ் ஆகியோர் அந்த அணிக்கு வலுசேர்ப்பார்கள்.
கடந்த இரண்டு முறை தொடர்ந்து ஐரோப்பிய பட்டத்தை வென்ற ஸ்பெயின் அணி ‘ஹாட்ரிக்’ பட்டம் வெல்லும் என்று சொல்லப்பட்டாலும் அந்த அணியின் சமீபத்திய பார்ம் பாராட்டும் வகையில் இல்லை. பயிற்சி ஆட்டத்தில் ஸ்பெயின் அணி, தரை வரிசையில் 137–வது இடத்தில் இருக்கும் ஜார்ஜியாவிடம் சந்தித்த தோல்வி அந்த அணி மீதான நம்பிக்கையை சீர்குலைத்து விட்டது எனலாம். அந்த அணியில் அல்வரோ மோராடா நட்சத்திர வீரராக பார்க்கப்படுகிறார். இத்தாலி அணி மீது அதிக எதிர்பார்ப்பு இல்லாவிட்டாலும் போட்டியின் வேகத்துக்கு ஏற்ப தனது ஆட்ட திறமையில் இத்தாலி அணி எழுச்சி கண்டு எதிரணிக்கு சவால் அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இளம் படை அசத்துமா?இளம் வீரர்களை அதிகம் கொண்ட அணியான இங்கிலாந்து அணி முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்புடன் இந்த போட்டியில் களம் காணுகிறது. தகுதி சுற்று ஆட்டங்கள் அனைத்திலும் வெற்றி பெற்றதால் அந்த அணி மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளது. வெய்ன் ரூனி, மார்கஸ் ரஷ்போர்ட் உள்ளிட்ட துடிப்பான வீரர்கள் அந்த அணியில் இடம் பெற்று இருக்கிறார்கள். இங்கிலாந்து அணி போட்டி தொடக்கத்தில் அபாரமாக செயல்படுவதும், அதன் பிறகு அதள பாதாளத்தில் விழுவதும் வழக்கமாகும். அந்த குறையை இந்த போட்டியில் இங்கிலாந்து அணி தவிர்க்குமா? என்பதே அந்த நாட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும்.
கருப்பு குதிரைகள் என்று வர்ணிக்கப்படும் பெல்ஜியம்,அணி புறந்தள்ளி விடமுடியாது. திடீரென விசுவரூபம் எடுக்கும் இந்த அணிகள் எதிரணியை அச்சமின்றி அடக்கும் சக்தி வாய்ந்தவையாகும். இதில் டென்மார்க் 1992–ம் ஆண்டிலும், கிரீஸ் 2004–ம் ஆண்டிலும் பலமான அணிகளுக்கு அதிர்ச்சி அளித்து கோப்பையை வென்று எல்லோரையும் வியக்க வைத்ததை மறந்து விட முடியாது.
ரொனால்டோ3 முறை உலகின் சிறந்த வீரர் விருதை பெற்ற கிறிஸ்டியானோ ரொனால்டோ (போர்ச்சுகல்), இனியஸ்டா (ஸ்பெயின்), தாமஸ் முல்லர் (ஜெர்மனி), பால் போக்பா (பிரான்ஸ்) ஆகியோர் தங்களது நளினமான ஆட்டத்தின் மூலம் ரசிகர்களுக்கு விருந்து படைப்பார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
பிரான்சில் கடந்த நவம்பர் மாதம் தீவிரவாத தாக்குதல் நடந்தது. தற்போதும் அங்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. இதனால் போட்டி நடைபெறும் இடங்கள் உள்பட முக்கியமான இடங்களில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கின்றன.
பரிசுத்தொகைஇந்த போட்டியின் மொத்த பரிசுத்தொகை சுமார் ரூ.2 ஆயிரம் கோடியாகும். சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.64 கோடியும், 2–வது இடம் பெறும் அணிக்கு ரூ.37 கோடியும் பரிசாக கிடைக்கும். இதுதவிர பங்கேற்பு கட்டணம், ஒவ்வொரு வெற்றிக்கும் பல கோடி பரிசு மழை அணிகளுக்கு கிட்டும்.
இதுவரை சாம்பியன்கள்
1960–சோவியத் யூனியன்
1964–ஸ்பெயின்
1968–இத்தாலி
1972–மேற்கு ஜெர்மனி
1976–செக்கோஸ்லோவக்கியா
1980–மேற்கு ஜெர்மனி
1984–பிரான்ஸ்
1988–நெதர்லாந்து
1992–டென்மார்க்
1996–ஜெர்மனி
2000–பிரான்ஸ்
2004–கிரீஸ்
2008–ஸ்பெயின்
2012–ஸ்பெயின்

ad

ad