புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஜூன், 2016

பாரிய ஆபத்துக்குள் இராணுவம்! காப்பாற்றுமாறு சட்டமா அதிபரிடம் கோரிக்கை

இலங்கை இராணுவத்தினர் பலருக்கு எதிராக காணப்படுகின்ற அரசியல் குற்றச்சாட்டு தொடர்பில் நிவாரண ரீதியான கொள்கை ஒன்றை
கடைபிடிக்குமாறு, இராணுவ தளபதி கிரிஹாந்த டி சில்வா, சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரியவிடம் கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இராணுவ தளபதி சட்டமா அதிபர் திணைக்களத்திடம் சென்று சட்டமா அதிபரை சந்தித்து இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
தற்போது வரையில் இராணுவத்திற்கு பாரிய பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக நல்லாட்சி அரசாங்கத்தை நடத்தி செல்வதற்கு பாதிப்பு ஏற்படக் கூடும் என இராணுவ தளபதி சட்டமா அதிபாரிடம் கூறியுள்ளார்.
அத்துடன் கடந்த கால குற்றங்கள் தொடர்பில் இராணுவத்தினரை சந்தேக நபர்கள் என பெயரிட வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
எனினும், குற்றப் புலனாய்வு பிரிவினால் மேற்கொள்ளப்படுகின்ற விசாரணை நடவடிக்கைகள் சரியானதெனவும், அத்துடன் இராணுவத்தினால் குற்றங்கள் தொடர்பிலான சாட்சிகளை மறைத்தமை தொடர்பில் எதிர்வரும் காலங்களில் விசாரணை மேற்கொள்ளப்படும் என சட்டமா அதிபர் குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய இராணுவத்தினருக்கு விசேட சலுகைகள் வழங்கப்படாதென குறிப்பிட்டுள்ளார்.
இந்த விசாரணை நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சர்வதேச சமூகத்தினரின் விசேட அவதானமும் செலுத்தப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரின் போது இந்த விசாரணை நடவடிக்கை தொடர்பில் கேள்வி எழுப்பப்படும் என்பதனால் இந்த விசாரணை நடவடிக்கைகளை விரைவில் மேற்கொள்வது சட்டமா அதிபர் திணைக்களத்தின் பொறுப்பு என சட்டமா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலையுடன் தொடர்புடைய இராணுவத்தினர் அனைவரையும் குற்றப் புலனாய்வு பிரிவினர் கண்டுபிடித்துள்ளமையே, இராணுவ தளபதி, சட்டமா அதிபரை சந்திப்பதற்கு முக்கிய காரணமாகும்.
லசந்த கொலைக்காக மூன்று குழுக்கள் தனித்தனியாக ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த செயற்பாடு, இராணுவ புலனாய்வு பிரிவு அதிகாரியான மேஜர் அன்சார் என்பவரினால் மேற்கொள்ளப்பட்டதென தகவல் வெளியாகியுள்ளதாக பொலிஸ் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
இந்த கொலை சம்பவம் தொடர்பிலான விசாரணை நடவடிக்கைகளுக்காக குற்றப் புலனாய்வு திணைகளம் இராணுவத்தினரிடம் கோரியுள்ள தினசரி குறிப்பு புத்தகம் இதுவரையும் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த குறிப்பு புத்தகம் அரசாங்கத்தினால் அச்சிடப்பட்டு வழங்கப்படுகின்ற நிலையில் அனைத்து அதிகாரிகளினாலும், முகாமிற்கு செல்லும் நாட்கள் மற்றும் நேரங்கள் தொடர்பில் இதில் பதிவிடுவது அவசியமாகும்.
எப்படியிருப்பினும் லசந்த கொலை தொடர்பில் அப்போதைய இராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிடவும் எதிர்வரும் நாட்களில் வாக்குமூலம் பெற்றுகொள்ளப்படவுள்ளதென அறிந்து கொள்ள முடிந்துள்ளன.
அத்துடன் அவரது முன்னாள் பாதுகாப்பு அதிகாரிகளின் தினசரி பயணங்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக நீதிமன்ற அனுமதி கிடைத்துள்ளன.
இதேவேளை தற்போதைய இராணுவ புலனாய்வு பிரிவு பிரதானி சுரேஷ் செலேவிடம் விசாரணை மேற்கொள்வதற்காக நிதிமன்ற அனுமதி பெற்றுகொள்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.
எப்படியிருப்பினும் தங்கள் அதிகாரிகளுக்கு மாத்திரம் பொறுப்பு கூறுவதாகவும் குறிப்பு புத்தகத்தில் பதிவிடுவதில்லை எனவும், இராணுவ புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, இராணுவ தளபதி தங்கள் அதிகாரிகள் தொடர்பில் மேற்கொள்ளப்படுகின்ற பொலிஸ் விசாரணை தொடர்பில் கடந்த திங்கட்கிழமை பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவிற்கு அழைப்பேற்படுத்தி ஆராயந்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
இதன்போது இராணுவத்தினருக்கு எதிராக நீதிமன்றத்தில் உத்தரவு பெற வேண்டாம் என கேட்டு கொண்டுள்ளார். எனினும் சட்டமா அதிபரின் உத்தரவிற்கமைய பொலிஸார் செயற்பட வேண்டும் என பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

ad

ad