புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஜூன், 2016

நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய வருடாந்திர தேர்த் திருவிழாவிற்குச்சென்றமூவர்கடலில் மூழ்கி பலி

யாழ்ப்பாணம் நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய வருடாந்திர தேர்த் திருவிழாவிற்குச்சென்ற 8 இளைஞர்களில் மூவர் கடலில்
நீராடிய போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர்கள் யாழ்ப்பாணம், கோண்டாவில், நாராயணன் கோவிலடியைச்சேர்ந்தவர்கள் என்றும் இவர்களில் இருவர் சகோதரர்கள் என பொலிஸார் கூறியுள்ளனர்.
மேலும், இவ்வாறு உயிரிழந்த மூவரது சடலங்களும் யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ad

ad