புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 ஜூலை, 2016

தனியான ஆட்சி அமைக்க திட்டமிடுகிறாரா ரணில் ?

இலங்கையின் சமகால தேசிய அரசாங்கத்தில் பல்வேறு முரண்பாடுகள் ஏற்பட்டுள்ள நிலையில், நல்லாட்சி அரசாங்கம் தொடருமா என்பது தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளது.

இந்நிலையில் நீண்டகாலத்தின் பின்னர் அதிகாரத்தை பெற்றிருக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தனிப்பெரும் கட்சியின் கீழ் அரசாங்கத்தை அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பிளவு பட்டு பலவீனம் அடைந்துள்ள நிலையில், கூட்டு எதிர்க்கட்சியினரின் ஆதரவை பெற்றுக்கொள்ள பிரதமர் முயற்சிகளை எடுத்துள்ளார்.

இதன்மூலம் தேசிய அரசாங்கத்திலிருந்து விலகி, ஐக்கிய தேசிய கட்சியின் கீழ் அரசாங்கத்தை அமைக்க உள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதன்காரணமாக ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிர்வரும் நாட்களில் எந்த ஒரு காரணத்திற்காகவும் நாட்டை விட்டு செல்ல வேண்டாம் எனவும், கொழும்பில் தங்கியிருக்குமாறு நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமைத்துவத்தில் அரசாங்கம் ஒன்றை உருவாக்கும் நடவடிக்கை எதிர்வரும் நாட்களுக்கு மேற்கொள்ளப்படும் என நேற்று இரவு தொலைப்பேசி அழைப்பின் ஊடாக இந்த அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்று காலை ரணில் விக்ரமசிங்க மற்றும் மலிக் சமரவிக்ரம, ஜனாதிபதியை இறுதியாக சந்தித்து சரித ரத்வத்த என்பவரை மத்திய வங்கி ஆளுநர் பதவியில் நியமிக்குமாறு கூறியுள்ளனர்.

பிரதமர் யோசனைக்கு ஜனாதிபதி இணங்கவில்லை என்றால் தான் தேசிய அரசாங்கத்தில் இருந்து விலகி தனியாக அரசாங்கம் ஒன்றை உருவாக்கவுள்ளதாக பிரதமர் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களுக்கு தெரிவித்துள்ளார்.

அதற்கமைய கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர், ஐக்கிய தேசிய கட்சியில் இணையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய தேசிய கட்சி 105 ஆசனங்கள் தன்னகத்தை கொண்டுள்ளது. தனிப்பெரும் கட்சியின் அரசாங்கம் உருவாக்குவதற்காக மஹிந்த ராஜபக்சவின் கூட்டு எதிர்க்கட்சி ஆசனங்கள் 8 மாத்திரமே அவசியமாக உள்ளதென ஊடகம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.

தனியான கட்சியாக செயற்பட்ட பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா  ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து உறுப்புரிமையை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது

ad

ad