புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 ஜூலை, 2016

ஐ.நா தீர்மானத்தை நிறைவேற்ற இலங்கையுடன் நெருக்கமான தொடர்பு-மனித உரிமை கண்காணிப்பகம் குற்றச்சாட்டு

கடந்த அக்டோபர் மாதம் தொடக்கம் இலங்கை அரசாங்கம் போர்க்குற்ற விசாரணைப் பொறிமுறை குறித்த ஐ.நா மனித உரிமை பேரவை தீர்மானத்திலிருந்து அவ்வப்போது பின்வாங்கிவருவதாகத் தெரிவித்துள்ள மனித உரிமை கண்காணிப்பகம், ஜெனீவா தீர்மானத்தை முழுமையாக நிறைவேற்றுப்படுவதனை சபை உறுதிசெய்யவேண்டும் என்று கோரியுள்ளது. 

ஐ.நா மனித உரிமை பேரவையில் 32 ஆவது கூட்டத்தொடரின் 40ஆவது பொது விவாதத்தில் கலந்துகொண்டு  உரையாற்றும் போதே அமெரிக்காவைத் தளமாகக் கொண்டியங்கும் மனித உரிமை கண்காணிப்பகத்திற்கான ஜெனீவாவிற்கான பணிப்பாளர் ஜோன் பிஷர் இதனைத் தெரிவித்தார்.

நாட்டில் இடம்பெற்ற மிகமோசமான மனித உரிமை மீறல் சம்பவங்கள் குறித்து இலங்கை  சில முக்கியமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இதில் கடந்த அக்டோபரில் ஐ.நா தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கியது அடங்குகிறதுகாணாமற்போனோரிற்கான அலுவலகத்தை அமைப்பது குறித்த வரைவு.  கடந்த 30 வருடங்களாக இடம்பெற்ற யுத்தத்தின்போது பலாத்காரமாகக் காணாமற்செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கானோர் குறித்த விசாரணைகளைச் செய்வதற்கான காத்திரமான அதிகாரங்களைக் கொண்டிருக்கிறது குறிப்பிட்டார். 

இந்த வரைபினூடாக உருவாக்கப்படும் சட்டமூலம் இதனூடாகக் கிடைக்கப்பெறும் தகவல்கள் தடங்கல்களேதுமின்றி சட்டத்தை அமுலாக்கும் துறைகளுக்குச் செல்வது உறுதிசெய்யப்படவேண்டும். 

பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படவோ அல்லது மறுசீரமைக்கப்படவோ இல்லை. பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் உடனடியாக விடுதலைசெய்யப்படவேண்டும் அல்லது உரியமுறையில் குற்றப்பத்திரிகை வழங்கப்பட வேண்டும்.

கடந்த அக்டோபர் மாதம் தொடக்கம் இலங்கை  அரசாங்கம் போர்க்குற்ற விசாரணைப் பொறிமுறைகுறித்த ஐ.நா மனித உரிமை பேரவை தீர்மானத்திலிருந்து அவ்வப்போது பின்வாங்கிவருவதனை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது.

கடந்த அக்டோபரில்  மேற்கொள்ளப்பட்ட ஜெனீவா தீர்மானத்தில் போர்க்குற்றங்கள் மற்றும் ஏனைய மோசமான மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்வதற்காக மேற்கொள்ளப்படும் பொறுப்புக்கூறும் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகள், விசாரணையாளர்கள், வழக்குத்தொடுனர்கள் உள்வாங்கப்படல் வேண்டும் என்று குறிப்பிட்டுக்கூறியிருந்தது.

இந்த விசாரணைகள் உள்ளூர் அழுத்தங்களிலிருந்து பாதுகாக்கப்படுவதனையும்,  சுயாதீனமாக இயங்குவதையும் உறுதிசெய்வதற்கு  மிகவும் அவசியமானது.

இலங்கை உத்தியோகபூர்வமாக வழங்கிய கடப்பாடுகளுக்கும், அதன் மூத்த அதிகாரிகள் பொதுவெளியில் விடுக்கும் அறிக்கைகளுக்கும் இடையிலான வேறுபாடு என்பது இது விடயத்தில் மேற்கொள்ளப்படக்கூடிய உண்மையான முன்னேற்றத்தினை தேவையற்ற விதத்தில் திசைதிருப்புவதாக அமைகிறது.

இந்தச் சபையில் இலங்கை  வெளிநாட்டு அமைச்சர் முன்வைத்த அறிக்கையில் ஜெனீவா தீர்மானத்தினை முழுமையாக நிறைவேற்றத் தயார் என்று தெரிவித்திருக்கிறார்.

ஆகவே, ஏற்றுக்கொண்டபடி இது முழுமையாக நிறைவேற்றப்படும் வரை இந்தப் பேரவை தொடர்ச்சியாக இலங்கையுடனான தொடர்புகளை நெருக்கமாகப் பேணவேண்டும் என மனித உரிமை கண்காணிப்பகத்திற்கான ஜெனீவாவிற்கான பணிப்பாளர் ஜோன் பிஷர்  தெரிவித்தார்.

ad

ad