புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 ஜூலை, 2016

கொக்கைன் போதைப்பொருள் கடத்தல் இன்டர்போலின் உதவியை பெற முடிவு

.இலங்கைக்கு கொக்கைன் போதைப்பொருள் பெருமளவில் கடத்தி வரப்படுவதை அடுத்து இந்த  கடத்தல் தொடர்பான விசாரணையை  மேற்கொ ள்வதற்கு சர்வதேச பொலிஸாரான இன்டர்போலின் உதவியை பெற எண்ணியுள்ளதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

அதுமாத்திரமின்றி கொக்கைன் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக அமெரிக்கா போன்ற நாடுகளின் புலனாய்வுத் தகவல்களை பரிமாறிக்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று(வெள்ளிக்கிழமை) பேலியகொடை கொள்கலன் தளத்தில், 8 கொள்கலன்களில் இருந்து 301.1 கிலோகிராம் கொக்கைன், போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டிருந்தது.
கைப்பற்றப்பட்ட கொக்கைன் இதுவரையில் இலங்கையில் மீட்கப்பட்ட அதிகூடிய அளவானதென  தெரிவிக்கப்படுகின்றது.

ad

ad